பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

69

அஃது இன்பியல், துன்பியல் வேறுபாடின்றி, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் போல் இரண்டும் கலந்தவையே.

ஆங்கில நாடகம் பாட்டாகவோ உரைநடையாகவோ, இரண்டும் கலந்ததாகவோ நாடகாசிரியன் மனம்போல இ யங்கிற்று. கிரேக்க நாட்டில் துன்பியல் கவிதையாகவும், என்பியல் உரைநடையாகவும் இயங்கின. ஆனால், சமஸ்கிருத நாடகங்கள் எங்கும் இடையிடையே பாட்டுக் கலந்த உரைநடையாக இயங்கின. தனிப் பாட்டோ தனி உரைநடையோ

கிடையாது.

சமஸ்கிருத நாடகத்தில் காட்சிகள் மட்டுமல்ல, காட்சிகளுக்கு இடையே இடைக்காட்சிகள் (உபாங்கம்), காட்சிகளுக்கு முன்னுரை (ப்ரஸ்தாவனா), பின்னுரை (அவதாரிகா) நாடகத்துக்கே ஒரு முன்னுரை, கடவுள் வாழ்த்து (நாந்தீ) ஆகியவை உண்டு. இவற்றுள் சில, கிரேக்க நாடகங்களில் இடம் பெற்றவையே.

முன்னுரை அங்கே முன்மொழி (Prologue) என்றும், பின்னுரை பின்மொழி (Epilogue) என்றும், இடைக்காட்சி ணைக்காட்சி (Interlude) என்றும் வழங்கின.

சமற்கிருத நாடகத்தில் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்புகள் இரண்டு உண்டு. அதில் நடிக நடிகையரல்லாமல், இன்றைய நாடக நடிப்பாசிரியரை நினைவூட்ட வல்ல சூத்திரதாரர் என்ற நாடகத் தலைவர் உண்டு. வாழ்த்தையும் முன்னுரை, பின்னுரை, டைக்காட்சிகளையும் தனித்தோ ஒரு நாடக நடிகருடனோ நடிப்பவர் அவரே.

சமற்கிருத நாடகத்துக்கே உரிய இன்னொரு தனிப்பண்பு அது பல மொழிகளில் அமைந்துள்ளதேயாகும். ஆடவரில் உயர்ந்தவர் அரசர், புரோகிதர், தேவர்கள் சமற்கிருத மொழி பேசினார்கள். ஆடவரில் கீழ் வகுப்பினரும் பெண்கள் அனைவரும் பிராகிருதம் என்ற வட நாட்டு மக்களின் அக்காலத் தாய் மொழிகளில் பேசினார்கள்.

ஆங்கிலம், கிரேக்கம், சமற்கிருதம் ஆகிய இந்த மூன்று மரபுகளின் பண்புகளையும் மனத்தில் கொண்டால், உலக நாடக மரபின் தொடக்க நிலையை நாம் உய்த்துணரலாம். அம் மூன்று