பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் - 15

மரபுகளின் தொடக்க நிலையாக மலையாள மரபும் தமிழ் மரபும் விளங்குவது காண்போம். அது மட்டுமன்று, சிலப்பதி காரத்தின் நாடகப் பண்பு, முத்தமிழ்ப் பண்பு ஆகியவை அப்பொழுதுதான் முற்றிலும் விளக்கமடையும்.

அம் மூன்று மரபுகளின் ஒப்பீட்டினால் அம் மூலக் கூறுகளைக் காண முயல்வோம்.

விழாக் காட்சி நாடகங்கள், ஆங்கில, கிரேக்க, சமற்கிருத நாடக மரபுகள் ஆகிய யாவும் உலக நாடக மரபின் தொடக்கக் கால நிலைகளைக் காண நமக்கு உதவுகின்றன.

நாடகக் கலை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை உடையது. ஆனால், இன்று நாம் காணும் உருவுடனேயே அது 4000 ஆண்டுகளுக்கு முன்னோ, 2000 ஆண்டுகளுக்கு முன்னோ, 400 ஆண்டுகளுக்கு முன்னோ கூட கூட இருந்ததில்லை. நம் காலத்திலிருந்து முன்னோக்கிச் செல்லச் செல்ல, இன்று காணப்படும் பல கூறுகள் மறைந்து, அக்கால நாடகம் நமக்கு விசித்திரமான வடிவங்களை உடையதாக விளங்குவது காண்போம்.

நம் தமிழகத்திலேயே 40 ஆண்டுகளுக்கு முன் கண்ணையா நாடகக் கழகத்தினர்தாம் திரைக்காட்சிகளையும், ஒளிமாற்றம், திரைமாற்ற வசதிகள் ஆகியவற்றையும் பெருக்கி, இன்றைய நவநாகரிக நாடக மேடையைப் படைத்தனர் என்று முதியவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அதற்குமுன் தமிழ் நாட்டு நாடக மேடை இன்றைய தெருக்கூத்திலிருந்து மிகுதி வேறுபட்டதன்று. ஆயினும், தெருக்கூத்துகள் பண்படாததை அக்கால நாடகங்கள் பண்பட்ட தெருக் கூத்துகளாக இயன்றன என்னலாம். அவை பண்டை நாடகங்களின் எச்ச மிச்சமான சின்னங்களமைந்த பண்டை நாடகங்களின் உயிர் மரபில் வந்த உயிர் வளமுடைய உயிர்க் கலைகளல்ல.

ஷேக்ஸ்பியரும் சிலப்பதிகாரமும்

ஷேக்ஸ்பியர் கால ஆங்கில நாடகம் தமிழகத் தெருக் கூத்தைவிட ஒரு சிறிதே முன்னேற்றம் உடையது.தெருக் கூத்தில் சில சமயம் நாடக மேடை முன்புறம் மட்டும் திறந்திருக்கும். சில