பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

71

சமயம் நாற்புறமும் திறந்த மேனியாக இருக்கும். மக்கள் நாற்புறமிருந்தும் நாடகம் பார்ப்பார்கள். ஷேக்ஸ்பியர் கால நாடகங்களில் முன்புறம் மட்டும் திறந்திருந்தது. ஒரு காட்சி முடிந்தவுடன், இன்று ஒரு திரை மேடையை மறைப்பது போல அன்று மறைப்பதில்லை. நடிகர் சில சமயம் இறங்கிப் போய் வேடம் மாற்றி வருவர். சில சமயம், தொடுத்து அடுத்த காட்சி நடைபெறும்.

காட்சி முடிவையும், அடுத்த காட்சித் தொடக்கத்தையும் காட்ட ஷேக்ஸ்பியரும் அவர் கால நாடக ஆசிரியர்களும் ஒரு முறையைக் கையாண்டனர். நாடகம் உரை நடையிலிருந்தால், காட்சியிறுதியில் பேசும் நடிகர் பேச்சிலேயே, 'போய் வருகிறேன், 'நாழிகையாயிற்று' என்பன போன்ற சொற்கள் ஆசிரியரால் திறமையாகக் கதையுடன் கதையாகப் பெய்யப்படும். இன்றைய திரைக் காட்சிப் படங்களில் ‘இடைவேளை' அறிவிப்பில் பல திரைக் கலைஞர் இதே முறையைக் கையாளுவது குறிப்பிடத் தக்கது. நாடகம் பாட்டாய் இயற்றப்பட்டால், கடைசி வரி சற்று நீண்டதாகவோ, எதுகை மோனை வகைகளில் ஏதேனும் தனிச் சிறப்புடையதாகவோ அமைக்கப்படும். நாடகம் பார்ப்பவர்கள் காட்சி முடிகிறது என்று அறிய, இஃது ஒரு குறிப்புச் சின்னமாய் உதவிற்று.

சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதையும் 'என்' அல்லது என' என்ற அசைக் குறிப்பு பெற்று முடிகிறது. இது ஷேக்ஸ்பியர் கால வழக்கத்தை நினைவூட்டுகிறது.

ஷேக்ஸ்பியர் கால நாடகத்தில் பின்னணித் திரைக்காட்சி கிடையாது. ஆகவே காலை, மாலை, காடு, ஆறு ஆகியவற்றை இன்றுபோல் அன்று கண்கூடாகக் காட்ட முடியாது. ஆகவே, கலைஞர் காட்சித் தொடக்கத்தில் உரையாடல் மூலமே இச் செய்திகளைத் தெரிவித்தனர். காணும் காட்சிகள், கேட்கும் கேள்விச் சொற்களாகத்தான் தீட்டப்பட்டன.

ங்கே

சிலப்பதிகாரம் முழுவதிலும் இப் பண்பை ஆங்கில நாடகங்களில் காண்பதைவிட மிகுதியாகக் காணலாம். அந் நாடகத்தைப் பலர் நாடகக் காப்பியம் அல்லது காப்பியம் என்று கருத இப் பண்பு பெரிதும் காரணமாகிறது. ஷேக்ஸ்பியர் கால