பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் - 15

நாடகத்தின் உதவி இல்லையென்றால், இஃது அக்கால நாடகப் பண்பின் சூழ்நிலை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே முடியாது.

விழாக் காட்சிப் பண்பு

ஷேக்ஸ்பியருக்கு முற்பட்ட விழாக்காட்சி நாடகம் உலகத் தொடக்க நாடகப் பண்புகளில் பலவற்றை இன்னும் தெளிவாகக் காட்டுகின்றது.இன்று மேடை ஓரிடத்தில் இருக்கிறது. காட்சிகள் மேடையில் மாறி மாறி வருகின்றன. மக்கள், முன் இருந்து பார்க்கின்றனர். விழாக் காட்சியில் மேடை சகடம் போல் உருண்டோடி ஊர்வலமாகச் சென்றது. இன்று ஒரே மேடையில் எல்லாக் காட்சிகளும் இயங்குகின்றன. அன்று ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு மேடையாகப் பல மேடைகள் பார்ப்பவர் முன், காட்சி காட்சியாக ஓடின. நடிப்பில் அன்று காதுக்குக் கேட்கும் பேச்சு நடிப்புக் குறைவு. கண்ணுக்குத் தெரியும் காட்சி நடிப்பே மிகுதி.சிலப்பதிகார முழுவதிலும் தமிழ் இடம் பெற்றாலும் அது கேட்கும் தமிழ் அன்று, காணும் தமிழ் என்பதை அது நினைவூட்டுகிறது.

கிரேக்க மரபும் - சிலம்பு மரபும்

ஆங்கில நாடகத்துக்கு முற்பட்டது சமற்கிருத நாடகம். அதற்கும் முற்பட்டது கிரேக்க நாடகம். இரண்டும் நம்மை இன்னும் பழம் பண்புகள் நோக்கி இருவேறு திசைகளில் இழுத்துச் செல்கின்றன.

இன்றைய நாடகத்தில் பெரும்பாலும் உறுப்பினர் எத்தனை பேரோ, கிட்டத்தட்ட அத்தனை நடிகர் நடிகையர் இருப்பதே இயல்பு. சில சமயம் ஒரே நடிகர் இரண்டு அல்லது பல உறுப்பினர் பகுதிகளை நடிப்பதுண்டு. ஆனால், நாடகாசிரியர் ஒரே சமயத்தில் மேடைக்குக் கொண்டு வாராத உறுப்பினர் பகுதிகளாக அவை இருத்தல் வேண்டும்.

கிரேக்க நாடகத்தில் தொடக்கத்தில் ஒரே ஓர் உறுப்பினர்தான் இருந்தார். இடையிடையே அவர்க்கு ஓய்வு தந்து, தறுவாய்க்கேற்றபடி பாடும் ஒரு பாடற்குழுவும் (Chorus) இருந்தது. கதையுறுப்பினர் எல்லாரின் பகுதிகளையும் ஒரு