பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

73

நடிகரே நடித்தார். இந் நிலை பெரிதும் நம் நாட்டில் கதைக் கச்சேரி நடத்துபவர் நிலையேயாகும். பாடற் குழுவுக்காகக் கிரேக்க நாடகங்களில் அமைந்த பகுதிகள் சிலப்பதி காரத்திலுள்ள கானல் வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை முதலிய இசைப் பாடல்களை நினைவூட்டுகின்றன.

கிரேக்க நாடக மேடையில், நாளடைவில் முக்கிய நடிகர்க்குத் துணை நடிகர் ஏற்பட்டனர். உரையாடல்கள் நாடகங்களில் திறம்பட இடம் பெற முடிந்தது இதன் பின்னரே என்பது தெளிவு. கிரேக்க நாடக வரலாற்றில் பிற்காலத்தில் - சிறப்பாக இன்பியலில் - நடிகர் தொகை பெருகிற்று.சிலப்பதிகார நாடகப் பண்பு கிரேக்கர் நாடகத்திலும் பழைமையுடைய பண்பு. ஏனென்றால், இங்கே தனி நடிகர் ஒருவரே பெரும்பாலும் நடித்தார். ஒரு சில கட்டங்களில் மட்டும் துணை நடிகர் பங்கு கொண்டார். தனிநடிகரே கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர் பகுதிகளையும் நடித்தார்.

சமற்கிருத மரபு தரும் ஒளி விளக்கம்

கிரேக்க நாடகத்தின் தலை நடிகரே சமற்கிருத நாடகத்தில் சூத்திரதாரராக வருகிறார். தமிழ், மலையாள நாடகமேடைகளில் வரும் தலைமை நடிகரே இந்தச் சூத்திரதாரர். ஆனால், படிப்படியாக ஒவ்வொரு பகுதிக்கும் கிரேக்க நாடக காலத் திலேயே ஒவ்வொரு நடிகராக நடிகர் தொகை பெருகி விட்டதனால், தலைமை நடிகர் நடிப்பாசிரியராகவும் மேடைத் தலைவராகவும் மாறினார்.

சமற்கிருத நாடகத்தின் சூத்திரதாரர் பண்பு தமிழ்- மலையாள நாடகங்களை உள்ளவாறு உணர ஒரு சிறந்த வழிகாட்டியாகும். சூத்திரதாரர் என்ற பெயரே இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் உடையது. அவர் வேலை, மணிகளை ஒரே சூத்திரத்தில் கோப்பது போல, காட்சிகள் இடைக் காட்சிகள், முன்னுரை ஆகியவற்றை எல்லாம் ஒரே தொடர்புடையவையாகக் கோப்பதேயாகும். கிரேக்க நாடகத்தின் தலைமை நடிகர் அவரே என்பதை இது சுட்டிக்காட்டுவதுடன், அத்தலைமை நடிகருக்குக் கிரேக்க நாடகத்தினும் முற்பட்ட காலத்தில் இருந்த மற்றொரு பண்பையும் இது விளக்குகிறது.