பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

79

‘முதியோர்

(பொருந. 187-8)

அவைபுகு பொழுதில் தம்பகை முரண் சொலியவும்’

என்ற பொருநராற்றுப்படையின் குறிப்புடன்

“இளமைநாணி முதுமை எய்தி

உரைமுடிவு காட்டிய உரவோன்”

(மணிமேகலை)

என்ற மணிமேகலைக் குறிப்பும் இரண்டாம் கரிகாலனே பெரும் பெயர்க்கரிகாலன் என்று சுட்டுகின்றன.

ஆயினும் சிலப்பதிகாரத்தின் வஞ்சின மாலை குறிப்பிடும் கரிகாலன் மகள் ஆதிமந்தி வரலாறு பரணர் பாடிய அகப்பாடல் ஒன்றில் (அகம் 222) குறிக்கப்படுகிறது. எனவே புராணப் பெரும் புகழ்க் கரிகாலனும், சிலப்பதிகாரம் மணிமேகலை குறிக்கும் கரிகாலனும், கல்வெட்டுக்களில் புகழப்படுபவனும் இரண்டு கரிகாலர்களும் அல்ல; மூலமுதல் கரிகாலனே என்றும், அவன் புகழும் செயலிற் சிலவும் பிந்திய இரு கரிகாலர்களாலும் மேற் கொள்ளப்பட்டும் அவர்கள் மீது புலவரால் சார்த்தப்பட்டும் வந்தன என்றும் கூற இடமுண்டு.

இரண்டாம் கரிகாலன் (மூலமுதல் கரிகாலனை ஏற்றால் அவனிடத்திலிருந்து மூன்றாம் கரிகாலன்) செய்திகள் என்று பட்டினப்பாலை பெருநராற்றுப்படை ஆகிய இருபாக்களாலும் உறுதியாகக் கூறத்தக்கவை கீழ் வருபவையே.

இரண்டாம் கரிகாலன் திருமாளவளவன் என்ற புகழ்ப் பெயருடையவன் (பட். பாலை 299). அவன் கரிகாலன் என்ற பெயரும் உடையவன் (பொருநர். 148). அவன் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (மேற்படி 130). அவன் பிறக்கும்போதே அரசுரிமை பெற்றவன், ஆனால், சிறைப்பட்டு வாளால் விடுதலை யுற்றான். (பொருநர், 132; பட். பா.221-7) அவன் இளமை கண்டு முறைசெய்யும் ஆற்றல் பற்றி ஐயுற்ற முதுமை வாய்ந்த அமைச்சர் நாணும்படி முதுமை வேடத்தில் வந்து முறை செய்தான் (பொருநர்.187-8). பல சமயச்சார்பான விழாப்பணிகள், வேள்வி முறைகள் செய்தான் (பட். பா. 200-203). ஒளியர், அருவாளர், பாண்டியர், வடவர், மேல்புலத்தவர்கள்