பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 16

உறையூரிலிருந்து அரசாண்ட தித்தன் என்ற ஒரு சோழன் காலத்தில் வடுகவேந்தன் கட்டியும் மற்றொரு பாணர் குடி மன்னனும் உறையூர் வரை படையெடுத்து வந்து அதனை முற்று கையிட்டதாக அறிகிறோம். இத்தித்தனுக்கு ஐயை என்ற சீர்சான்ற புதல்வியிருந்ததாகவும், அவன் உறையூரை நன்கு அரண் செய்து காத்ததாகவும் அகப்பாடல்கள் சில குறிக்கின்றன. அவன் கோட்டையிலிருந்து எழுப்பிய போர் முரசம் கேட்டே எதிரிகள் ஓடியதாகப் புலவர் ஒருவர் உயர்வு நவிற்சிச்சுவை தோன்றப் பாடியுள்ளார்.

மற்றொரு பெரும்போரில் சோழன் வேல்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி என்ற சோழப் பெருமன்னனும் சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனும் வேங்கை யுடன் வேங்கை எதிர்த்ததுபோல் எதிர்த்து நின்று பொருதினர். இருபுறத்துப் படைகளும் இருபுறத்தரசரும் முற்றிலும் சரிசம வலிமையுடையவராகவும், சரிசம வீரமுடையவராகவுமே இருந்த தால், இருவருக்குமே வெற்றி கிட்டவில்லை. அது மட்டுமன்று. ரு பேரரசர்களும் ஒருவர் மீது ஒருவர் மும்முரமாகத் தாக்கிப் போர் செய்து இறந்தனர். போர்க்களத்தின் வெற்றி இரு வேந்தருக்குமே கிட்டாமல் கூற்றுவனுக்கும், அவன் போர்ப் படைகளுக்கும், கழுகு பருந்துகளுக்குமே கிட்டிற்று!

ரு

இப்போர் விளைவாக எழுந்த துயரமிக்க காட்சிகளையும் அதனால் எழுந்த உருக்கமான கருத்துக்களையும் களங்கண்டு பாடிய இரு பெரும் புலவர் நமக்குத் தந்துள்ளனர்.

'யானையும் குதிரையும், தேரும் வீரரும் செயலற்றுக் கிடக் கின்றனரே! வீரர் கண் மறைத்துக் கேடயங்கள் கிடக்கின்றன. அடிப்பாரின்றி முரசுகள் உருளுகின்றன. நெஞ்சில் சாந்துடன் குருதியும் சேர்ந்து வடிய மன்னர் கிடக்கின்றனர். இனிநாடு என்ன ஆவது?” என்று பெரும்புலவர் பரணர் கலங்குகின்றார்.

எனைப்பல் யானையும் அம்பொருதுளங்கி

விளைக்கும் வினையின்றிப் படையொழிந்தனவே!

விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம்

மறத்தகை மைந்தரோடு ஆண்டுப் பட்டனவே!

தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்