தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந்தனரே! விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம் பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே! சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்! இனியே என் ஆவது கொல்தானே........
அகன்தலை நாடே!
85
(புறம் 63)
கழாத்தலையார் என்ற மற்றொரு புலவர், 'வெற்றியை நாடி வெற்றிக்குரிய இரு மன்னரும் இப்படிப் போர் புரிவதனால் என்ன பயன்?' என்று கேட்டு இறுதியில் இத்தகைய வீரம் பாழப்பாடாது என்று தேறி 'வாழ்க அவர் புகழ்' என்று அமைகிறார்.
வருதார்தாங்கி அமர்மிகல் யாவது?..... அறத்தின்மண்டிய மறப்போர் வேந்தர் தாம் மாய்ந்தனரே! குடை துளங்கினவே! உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே!.....
களங்கொளற்கின்றி, தெறுவர
உடன்வீழ்ந்தன்றால் அமரே? -பெண்டிரும் பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே!.. அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால்! பொலிக நும்புகழே!
(புறம் 62)
வெற்றி கொள்வார் யாருமில்லாமல் இரு பேரரசர் பெண்டிரும் தத்தம் கணவர் மார்பில் விழுந்து அழுதனராம்!
தமிழர் வீரத்தின் பெருமையையும், அது தமிழினத்துக்குச் செய்த அழிவையும் இப்போரும் பாடலும் நன்கு விளக்குகின்றன.