பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் - 16

6. சங்ககாலப் போர்கள் II

தமிழினத்தின் குடி மரபுகளுள் தலை சிறந்தன நான்கு என்று வகுத்துரைத்துள்ளார் தலைமை சான்ற சங்கப் புலவரான மாங்குடி மருதனார்.

“துடியன், பாணன், பறையன், கடம்பனென்று இந்நான் கல்லது குடியு மில்லை!”

(புறம் 355)

என்பது அவர் கருத்து. இந்நால் வகையினரும் பழமையும் பெருமையும் உடைய உச்ச உயர் குடியினராகக் கருதப்பட்டிருந் தனர் என்று அறிகிறோம். இந்நால்வரில் பறையரைத்தவிர மற்றவரைப்பற்றி நாம் இன்று தமிழகத்தில் மிகுதி கேள்விப் படவில்லை. பறையரும் இன்று ஒரு குடியினராய் இல்லை. புதிதாக இடைக்காலத்தில் எழுந்துள்ள சாதிகளுள் ஒரு சாதியினர் ஆகியுள்ளனர். அத்துடன் தமிழினத்தில் உச்ச உயர் குடியினராகிய அவர்கள் இன்று தாழ்ந்துவிட்ட தமிழரிடையே யும் மிகத் தாழ்ந்த படியினராக, தீண்டப்படாதவராகக் கருதப்படுகின்றனர். தமிழ், தமிழினம் அடைந்துள்ள இழிவெல்லையை இது குறித்துக்காட்டுகிறது.

பாணர் இயற்புலவராக மட்டுமன்றி இயல், இசை, நாடகம் ஆ ஆகிய மூன்றுக்கும் உரியவரான சங்ககாலப் பாடகர் வகுப்பையோ, மாவலி மரபினரான வாணர் வகுப்பையோ, இரண்டையுமோ குறிக்கக்கூடும். முன்னவர் முத்தமிழ்ப் பாக்களால் மன்னனைப் பாடும் உரிமையிலிருந்து முத்தமிழ்ப் பாக்களால் தெய்வத்துக்கு வழிபாடாற்றும் குருமார் வகுப்பாகி, தேவாரகாலத்துக்குப் பின் அரசியலுரிமையும் சமய உரிமையும் இழந்து, புதிய அயல் மரபு அளாவிய குருமார் கைப்பட்ட அடிமைகளாகவும், சமூக அடிமைகளாகவும்

கோயில்

இழிவுற்றனர்.

இன்று

அவர்கள்

தாழ்த்தப்