பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 16

அப்பெயர் பெற்றானாகல் வேண்டும். கடம்பர் பாண்டியரின் பழைய எதிரிகள் மட்டுமல்லர்; சேரர் எதிரிகளும் ஆவர் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. சேரர் எதிரிகளாக மட்டுமே தமிழ் இலக்கிய மரபில் கடம்பர் நம்முன் காட்சியளிக்கின்றனர். ஆனால், தமிழகத்துக்கு வெளியே, தென்னாட்டு வரலாற்றில் கடம்ப மரபினர் மூன்றாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை தனியரசாகவும், பேரரசாகவும், சிற்றரசாகவும் கிட்டத்தட்ட ஆயிர ஆண்டுகளுக்கு மேல் வட கொண்கானப் பகுதியில் பெருவாழ்வு பெற்றிருந்தனர் என்று அறிகிறோம்.

பல்லவர் வரலாறு எழுதுபவர் இந்தியாவுக்கு வெளியிலும் வடஇந்தியாவிலும் அப்பெயரின் தொடர்புகளைத் துருவித் தேடி அலசிப் பார்க்கத் தவறவில்லை. ஆனால், சேரர் வரலாறு எழுது பவர் தமிழகத்துக்கு வடக்கே நீண்ட காலம் ஆண்ட கடம்பரைப் பற்றிக் கவனிப்பதேயில்லை. அதுபோலக் கடம்பர் வரலாறு எழுதியவர்களும் தமிழிலக்கியமும் சேரர் வரலாறும் அவர்கள் வகையில் தரும் ஒளி மீது கருத்துத் திருப்புவதில்லை. து வியப்புக்குரியது ஆகும். ஏனெனில் கடம்ப மரபினரின் ஆட்சி முதல்வனாகக் கருதப்படுபவன் மயூரசர்மன் என்பவன். அவன் ஏறத்தாழ நான்காம் நூற்றாண்டில், கி.பி. 345 - க்கும் 370-க்கும் இடையே ஆட்சி செய்தவனாகக் கருதப்படுகிறான். கடம்பரைப் பற்றிப் பதிற்றுப்பத்துத் தரும் சான்றுகள், இதற்குக் குறைந்தது மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. தமிழிலக்கியம் இவ்வாறு கடம்பரின் தொடக்க வரலாறு கூறுவதுடன் அவர்கள் மூலத் தாயகம் எது என்பதையும், அவர்கள் எவ்வாறு வாழ்வு தொடங்கினர் என்பதையும் காட்டுகிறது.

கடம்பரும் தமிழிலக்கியமும்

வரலாற்றில் கடம்பர் தலைமைத் தாயகம் வனவாசி பன்னீரா யிரம் என்று குறிக்கப்படுகிறது. இதில் கடற்கரையோரப் பகுதியாகிய கொண்கானம் தொளாயிரமும் உள்நாட்டுப் பகுதியாகிய ஹல்சி பன்னீராயிரமும் சேர்ந்திருந்தன. பின்னாட்களில் அவர்கள் ஹாங்கல் ஐந்நூற்றையும், பேலூர், பயலநாடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இந்நாளைய கன்னட நாடு முழுவதும் பரவினர். மைசூரில் உள்ள கிரிபர்வதம்