தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
89
அல்லது பேளுரிலும், பல்லாரி மாவட்டத்தில் உள்ள உச்சங்கியிலும் அவர்கள் கிளைக்குடிகள் ஆண்டன. வரலாற்றுக் கால முழுவதும் அவர்கள் உள்நாட்டில் பரவி உள்நாட்டுக் குடிகளாகவே வாழ்ந்தனர். ஆயினும் அவர்கள் மூலத்தாயகம் காண்கானக் கடற்கரையே என்றும் பதிற்றுப்பத்தும் சங்க இலக்கியமும் காட்டுகின்றன.
சங்ககாலத்தில் தமிழகத்தின் வட எல்லையில் இருந்த கொண்கானப் பகுதியில் ஆண்ட குடித்தலைவன் நன்னன் ஆவன். அவன் தமிழக வேளிர்களுள் ஒருவன். அவன் நாடு, பாலி நாடு என்று அழைக்கப்பட்டது. அது தற்கால மலபார் மாவட்டத்துக்கு வடக்கே, வைநாட்டுக்கு வட கிழக்கில் தற்போது குடகு என்று வகுக்கப்பட்டுள்ள மாவட்டம் ஆகும். இந்நாட்டிலும் இதனை யடுத்த பகுதிகளிலும் இன்னும் 'நன்னன்' பெயர் மரபு குடிப் பெயர்களில் பொன்றாமல் நிலவுகிறது. வரலாற்றுக் கால முழுதும் கல்வெட்டுக்களிலும் காணப்பெறுகிறது. அத்துடன் பாண்டி நாட்டில் பெருஞ்சோழர் காலம் வரை நிலவிவந்த பண்டைத் தமிழ் எழுத்துமுறை தமிழகத்தில் வழக்கற்றுப் போய் விட்டாலும் இப்பகுதியில் இன்னும் ‘கோல் எழுத்து' என்ற பெயருடன் நிலவிவருவதாக அறிகிறோம்.
கு நாட்டு வரலாற்றில் ஹதர் காலம் வரை தமிழ் மூவேந்தர் ஆட்சித் தொடர்பின் சின்னங்கள் காணப்படுகின்றன.
சங்க காலங்களில் நன்னன் நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழாயினும், அது அன்றே செந்தமிழிலிருந்து பெரிதும் மாறுபடத் தொடங்கியிருந்தது. சங்கப்புலவர் நன்னனைத் தமிழிலேயே பாடினாரானாலும் அவன் நாடு திருந்தாத்தமிழ் பேசிய நிலம் என்பதைக்குறித்து 'மொழிபெயர் தேயம்' என அதை அழைத்தனர்.
பாலிநாடு சுரங்கத் தொழில் நடைபெற்ற பகுதியில் இருந்தது. ஆகவே அது பொன் வளமிக்கதாயிருந்தது. வியலூர், அரயம் என்பன அந்நாட்டில் உள்ள முக்கியமான கோட்டை நகரங்களாகும். இளஞ்சேட் சென்னியின் செருப்பாழிப் போர் நடந்த இடமாகிய 'பாழி' இந்நாட்டின் பழமை வாய்ந்த அரணமைந்த நகரங்களுள் ஒன்றேயாகும். இவை தவிர நன்னன்