பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

91

தெரியவரும், முதல் சேரனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலமுதலே அது தொடங்கிவிட்டது என்று காண்கிறோம்.

நெடுஞ்சேரலாதன் காலத்தையும் நம்மால் இன்னும் வரையறுத்துக் கூறமுடியாது. ஆனால், வரலாற்றாராய்ச்சியாளர் கனவு களையும் இலக்கிய ஆராய்ச்சியாளர் மதிப்பீடுகளையும் தாண்டிய பழமையுடையவன் அவன் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இமயத்தில் புலி பொறித்த சோழன் கரிகாலன் காலம் எதுவாயினும், அவன் அக்கரிகாலனுக்கு முற்பட்டவனாகவே இருக்க வேண்டும்.

தவிர, அவன் பழமையைச் சுட்டிக்காட்டும் இன்னொரு செய்தியும் உண்டு. சங்ககாலத்திலே சேரர் தலைநகராகப் பெயர் பெற்ற இடம் வஞ்சியே. சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் தலை நகராகவும், பதிற்றுப்பத்தில் அவனுக்கும் பிற்பட்ட சேரன் ஒருவன் தலைநகராகவும் அது குறிக்கப்பட்டுள்ளது. செங்குட்டுவன் காலத்திலேயே அது நீடித்துச் சேரர் தலைநகராய் இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இமயவரம்பன் காலத் தில் தலைநகரம் வஞ்சியாகவோ அல்லது கிளைக்குடியினர் வாழ்ந்த தொண்டியாகவோ இல்லை. அது ‘நறவு' என்ற பெய ரடைய நகரமாய் இருந்தது. இதுவஞ்சிக்கு நெடுந்தொலை வடக்கில் இருந்தது. சோர்தாயக நாடும் இச்சமயம் வட மலபாராகவே இருந்தது. இது சங்க காலத்திலேயே அறியப்படாத தொல்பழமைச் சின்னமாகும். அதே சமயம் ‘நறவு' தலைநக ராயிருந்த செய்தியைக் கிரேக்க ஆசிரியர் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுஞ்சேரலாதன் கடம்பழிப்பு

புகழ்ச்

சேரன் செங்குட்டுவன் முன்னோர்கள் செயல்களைத் தொகுத்துக்கூறும் இளங்கோவடிகள் அவற்றுடன் மாடலன் கூற்றாக இமயவரம்பன் செயல்களையும் குறித்துள்ளார்.

“போந்தைக் கண்ணிநின் ஊங்கணோர் மருங்கில்

கடற்கடம்பு எறிந்த காவல னாயினும்,

விடற்சிலை பொறித்த விறலோ னாயினும்......