பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

முரணியோர்த் தலைச்சென்று

கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்

நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி”

93

(பதிற் XX 1-5)

என்றதனால் அக்கடம்ப மரம் கடல் நடுவே ஒரு தீவில் இருந்த தென்பதும், அதன்கண் எதிர்த்து நின்று கடம்பரை அழித்து அம்மரம் சிதைத்தான் என்பதும் கூறப்பட்டுள்ளன.

இரண்டாம் பத்தின் இறுதியில் உள்ள பதிகம் இச்செய்தி களுடன் ஆரியர்களை அடிபணிய வைத்த செய்தியும், யவனர் கைகளைப் பின்னால் சுட்டித் தலையில் நெய் ஊற்றி அவர்கள் விடுதலைக்கீடாகப் பெரும் பொருள்பெற்ற செய்தியும் குறிக்கப் படுகின்றன. இங்கே யவனர் நாடு என்பது யவனர் குடியேற்றங் களில் ஒன்றாய் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் ஆண்ட உரோமப் பேரரசர் அக்ஸ்டஸ் காலத்தில் இத்தகைய ஒரு கிரேக்கக் குடியேற்றமும் கோயிலும் முசிறியில் இருந்ததாக அறிகிறோம்.

“வலம்படு முரசின் சேரல்ஆதன்

முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, நன்னகர் மாந்தர் முற்றத்து ஒன்னார்

பணி திறை தந்த பாடுசால் நன்கலம்,

பொன் செய் பாவை வயிரமோடு ஆம்பல்

ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்று அவண் நிலத்தினத் துறந்த நிதியம்’

(அகம் 127)

என்று மாமூலனார் கடம்பெறிதல், இமய விற்பொறித்தல், (யவனர்) பெருந்திறை கொணர்தல் ஆகிய நெடுஞ்சேரலாதன் செயல்களைக் குறித்தது காணலாம்.

பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்துக்குரிய பல்யானை செல் கெழுகுட்டுவன் சிலப்பதிகாரத்தில் ‘அகப்பா எறிந்த அருந் திறலான்' (சிலப் xxviil 144) என்று புகழப்படுகிறான். பதிற்றுப்