96
அப்பாத்துரையம் - 16
அவனைத் தனக்கு உட்படுத்தினான். நெடுமிடலுக்குப் பின் தகடூர் ஆண்டவர் சேர மரபினரே. ஆகவே அதிகமான் நெடுமான் அஞ்சியும் அவன் மரபினரும் சேரரால் புதிதாகத் தலைமை அளிக்கப்பட்ட குடிகளே என்று அறிகிறோம்.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பூமி நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். பூழி நாடு என்பது இந்நாளைய சேரர் தாயகமான வடமலையாளத்துக்கு வட வடக்கேயுள்ள தென்கன்னட மாவட்டமே. அதன் ஒரு பகுதியே நன்னனின் பாலி நாடாகிய குடகுப்பகுதி, இப்பூழி நாட்டுப் படையெடுப்பின் ஒரு நிகழ்ச்சியே கடம்பின் வாயிற் போர். அதில் நார்முடிச் சேரல் பொன்னங் கண்ணியும் பொன் மாலையும் சூடிய நன்னனை வென்று அவன் தலையை வெட்டி வீழ்த்தினான். அவனுக்குரிய பொன்னால் அணி செய்யப்பட்ட வாகை மரத்தை வேருடனும் கிளையுடனும் சிதைத்தழித்தான்.
“பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்முக மைத்தின் நார்முடிச் சேரல்"
(பதிற்: ஓடு 14-16)
அகநானூற்றிலுள்ள பரணர் பாடல்களால் நார்முடிச் சேரல் படைத்தலைவன் ஆய் எயினன் என்றும், நன்னன் படைத்தலைவன் மிஞிலி என்றும் தெரியவருகிறது.சேரர் படைத் தலைவனாகிய ஆய் எயினன் நன்னன் படைத்தலைவனாகிய மிஞிலியின் வேற்போருக்கு ஆற்றாது போரில் சாய்ந்தான்.
66
“கடும்பரிக்குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டென்”
“ஒன்னார்
ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
(அகம் 148)
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ
முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென"
அகம் 181)
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலால் நன்னன் முறியடிக்
கப்பட்டு வீழ்ந்தபோர் பெருந்துறைப்போர் என்று கல்லாடனார்
குறிக்கிறார்.