தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
66
குடா அது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன்பொருது களத்தொழிய வலம்படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்!”
97
(அகம் 199)
பெருந்துறைப்போர் என்பது கடம்பின் வாயில் பெருந் துறைப் போர் என்ற முறையில் கடம்பின் வாயிற் போருக்கே உரிய மற்றொரு பெயராய் இருத்தல் கூடும்.
சேரமான் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன்
கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்ற பெயருடைய ஒரு சேரனைப் பரணர் புறநானூற்றில் (புறம் 396) பாடியுள்ளார். கடலோட்டிய செயலை அதே புலவர் செங்குட்டுவன் செயலாகப் பதிற்றுப்பத்தில் கூறுவதால் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்பது சேரன் செங்குட்டுவனுக்குரிய மறப் பெயரே என்ற கொள்ளத்தகும்.
“பல்செருக் கடந்த கொல் களிற்று யானைக் கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன்
(பதிற்: XLVI 10 – 13)
கடற்கொள்ளைக்காரர் கடற்கரை அடுத்த ஒரு தீவில் கோட்டை கட்டி வாழ்ந்தனர். ஆகவே கடலே தமக்கு முழுநிறை பாதுகாப்பு அளிக்கும் என்று எண்ணினர். ஆனால், குட்டுவன் வீரர்கள் யானை மீதேறிநின்று கடலகத்தில் இறங்கி வேல்களை வீசினர். இதனால் பகைவரின் பாதுகாப்பு உடைபட்டது.
மற்றும்,
66
"கடும்பரிப் புரவி ஊர்ந்த நின் படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே!”
(பதிற்: XLI 26 - 27)
“கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ!”
(பதிற்: XLVIII 3 - 4)