பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

“கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்

சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்”

அப்பாத்துரையம் - 16

(சிலப். XX viii 114 - 5)

என்ற சிலப்பதிகார அடிகளால் அது பாலி அல்லது குடகு நாட்டு வியலூரே என்று தெரிகிறது. மிளகு வளர்வதும் யானை மிகுதியா கு யுள்ளதும் ஒருங்கேயிருப்பது மேல்கரையிலேயேயாகும். இம் முற்றுகையைக் கிட்டத்தட்ட இதே சொற்களிலேயே பதிற்றுப் பத்துப் பதிகம் தருகிறது.

'உறுபுலி அன்ன வயவர் வீழச்

சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி’

(பதிற். 5.பதிகம் 10 -11)

வியலூர் கோட்டை நகரம் என்று முன்பே கண்டிருக்கிறோம். அதை அழித்ததை அடுத்து நிகழ்ந்த செய்தியே கொடுகூர் வெற்றி, பதிகம் தரும் குறிப்பால் வியலூரும் கொடுகூரும் ஒரே ஆற்றின் எதிர் எதிர் கரையில் இருந்ததாகத் தெரிகிறது. வியலூர் எறிந்தபின் செங்குட்டுவன் ஆற்றைக் கடந்தே கொடுகூர் சென்று அதை அழித்தான்.

'வியலூர் நூறி,

அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து' என்பது இதனைத் தெளியக்காட்டும்.

நேரிவாயில் போர்

(பதிற். 5. பதிகம் 10– 11)

நேரிவாயில் என்பது இன்றைய திருச்சிராப்பள்ளி நகரின் பகுதியாக இருக்கும் பண்டை உறையூரின் தெற்குவாயில் அருகே அமைந்திருந்த ஓர் ஊர் ஆகும். அதில் நடைபெற்ற போர் சோழர் அரசுரிமைக்காகவே எழுந்தது. சேரன் செங்குட்டுவன் தாய்சோழர் குடிப்பிறந்தவளாதலால், அரசுரிமை கோரிய கிள்ளி வளவன் அவன் மைத்துனனாய் இருந்தான். ஆனால், அதே அரசுரிமைக்கு வேறு ஒன்பது சோழர்குடி இளவல்கள் போட்டியிட்டுக் கிள்ளி வளவனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். செங்குட்டுவன் கிள்ளி வளவனை ஆதரித்து ஒன்பது இளவரசரையும் ஒருங்கே யெதிர்த்து நின்று போரிட்டான்.