தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
101
போர் ஒரே பகலில் நடைபெற்று முடிந்துவிட்டது. செங் குட்டுவன் ஒன்பது சோழ இளவல்களையும் களத்தில் வென்று முறியடித்தான். தன் மைத்துனன் கிள்ளிவளவனையே சோழ மன்னனாக முடிசூட்டினான். மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெறும் சோழன் இவனே.
இப்போர் பற்றிப் பதிற்றுப்பத்துப் பதிகமும் சிலப்பதி காரமும் விரித்துரைக்கின்றன.
“வெந்திறல்
ஆராச் செருவில் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து”
என்று பதிற்றுப்பத்துப்பதிகமும்,
என்று
66
'ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரி வாயில் நிலைக்செரு வென்று’
சிலப்பதிகாரமும்
(பதிற் 5. பதிகம் 18 - 20)
-
(சிலப் XX viii 116 117)
குறிக்கின்றன.
இவையன்றி
சிலப்பதிகாரத்திலேயே, செங்குட்டுவனைப் புகழ்ந்து கூறும்
முறையில் மாடலன்,
“நின்
மைத்துனவ வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர், ஏவல் கேளார்,
வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல்ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!”
என்று இப்போரை விளக்கமாக எடுத்துரைத்துள்ளான்.
சு
செங்குட்டுவன் நாட்களுக்குள் சேர அரசே தமிழகத்தின் முதற்பேரரசாக நிலவிற்று. சோழப்பேரரசு வலி குன்றியதுடன், ஆற்றல் சிதறி ஆங்காங்கே தனி நகரில் தனி ஆட்சி செலுத்திய சிற்றரசுகளை அடக்கமுடியா நிலைமையடைந்தது. நேரிவாயில் போர் இதனைக் காட்டுகிறது. உறவு முறையை முன்னிட்டு, அதன்