பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

அப்பாத்துரையம் - 16

உள் நிகழ்ச்சிகளில் தலையிட்டதன் முலம் சேரன் ஆற்றல் அதன்மீது பின்னும் வளர்ந்தது. உறவு காரணமாகவே கிள்ளி வளவன் ஆட்சியைச் சேரர் வளர்ச்சி பாதிக்காமல் இருந்தது. அத்துடன் இச்சமயம் பாண்டியரும் சோழரைப் போலவே சேரனுக்கு அடங்கியிருந்தனர் என்று தோற்றுகிறது. கொங்கர் செங்களத்தில் இரு அரசரும் வேளிருடன் தோல்வி எய்தியதே இதற்குப் பெரிதும் காரணம் ஆகலாம்.

வடபுல எழுச்சி கங்கைப் போர் I

சேரன்செங்குட்டுவன் கண்ணகி சிலைக்காக வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்கு நெடுநாள் முன்பே கங்கைப் பேராற்றில் தன் முதற்போர் ஆற்றியிருந்தான். அவன் அப்போது வடதிசை சென்றது அவன் அன்னை கங்கையில் நீராடுவற்குத் துணையாகவே. ஆயினும் படையணிகளுடன் சென்றதால் பல ஆரிய மன்னர்கள் திரண்டு வந்து அவன் போக்கைத் தடுத்தனர். செங்குட்டுவன் தனியாக நின்று அத்தனை வேந்தரையும் களத்தில் சிதறடித்தான், ஓடிய ஒரு சிலர் நீங்கலாக மீந்தவர் அனைவரும் உயிர் பிறிதாகினர். கங்கைப்படுகளம் ஒரே குருதிக்களமாவும் பிணக்களமாகவும் ஆயிற்று.

சிலப்பதிகாரத்திலே மாடலன் கூற்றாகவே இப்போர்

வர்ணிக்கப்படுகிறது.

66

“கங்கைப்பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்

ஆரிய மன்னர் ஈரைந்நூற்று வர்க்கு

ஒரு நீயாகிய செரு வெங்கோலம்

கண் விழித்துக் கண்டது கருங்கட் கூற்றம்!'" (சிலப் XXV 160 - 164)

இப்போரின் கோரக்காட்சியையும் அதில் தனி யொருவனாக நின்று செங்குட்டுவன் வெற்றிக் கூத்தாடியதையும் சாவின் தெய்வமாகிய கூற்றமே கண்ணிமையாமல் வியப்புடன் பார்த்துக்கொண் டிருந்தது என்று கவிஞர் வியந்துரைக்கிறார்.

இப்போரில் கொங்கணரும் கலிங்கரும், கருநாடரும், பங்களரும்,கங்கரும் கட்டியரும்,ஆரியரும் பிறரும் எதிரிகளிடையே