தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
105
தப்பியோட முயன்றனர். ஆனால், சேரன் வீரர் அவர் களைப் பற்றிக் கொணர, அரசன் அவர்களை விலங்கிட்டுப் பிணித்தான், பின் அமைச்சன் வில்லவன் கோதையுடனும் படைத் தலைவன் கல் கொண்டு வரும்படி பணித்தான்.
இமயத்திலிருந்து பத்தினிக்கல் கனகவிசயரின் முடிமீதே ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. மற்ற ஆரிய அரசர்கள் இதற்குள் கங்கையின் தென்கரையில் தமிழ்ப் பேரரசனுக்கும் அவன் படை வீரர்களுக்கும் தங்குவதற்குரியபாடிப் பெருநகர் அமைத்திருந்தனர். இங்கே குயிலாலுவப் போரில் இறந்தவர்களுக்குரிய வினை முறைகள், இறந்தவர் மைந்தர் குடிமரபினருக்கான மட்டுமதிப்புப் பரிசில்கள், வெற்றி வீரர்களுக்குப் பொன்னால் செய்த வாகைப் பூ முதலிய சிறப்புக்கள் நிகழ்த்தப்பட்டன.
"நிறப்புண் கூர்ந்து
புறம் பெறவந்த போர்வாள் மறவர்
வருகதாம் என வாகைப் பொலந்தோடு பெருநாளமயம் பிறக்கிடக்கொடுத்து”
(சிலப் - xxvii 41 -44)
என்று இளங்கோ இச்செயல் போற்றியுள்ளார்.
தமிழரைப் பழித்த கனகவிசயர் கல் சுமந்துவரும் காட்சியைப் பாண்டிய சோழருக்குக் காட்டி வரும்படி அரசன் படைத்தலைவன் நீலனிடம் அவர்களை ஒப்படைத்து அனுப்பிவிட்டு வஞ்சிக்கு மீண்டான்.
பத்தினிக்கல் வந்ததும் அதற்கு முறைப்படி நீர்ப்படை செய்யப்பட்டது. இச்சமயம் தமிழகத்தின் அரசியல் நிலைகளை அறிந்து வந்து கூறிய மாடலன் என்ற பார்ப்பனனுக்குத் தன் எடையாகிய ஐம்பது துலைப்பொன் நன்கொடையளித்தான்.
குயிலாலுவப் போர் அல்லது இரண்டாவது கங்கைப் போர் நிகழ்ச்சி பதிற்றுப்பத்தில் பதிகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. “கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை