தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
111
அடக்கியும் தாமே முடியரசராக விழைந்த போக்கு. கடைச் சங்க காலத்தில் மலையமான் திருமுடிக்காரியும், அதிகமான் நெடுமானஞ்சியும், பறம்புமலைப் பாரியும் இம்முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெறாது அழிந்தவர்களேயாவர். இதற்கு மேம்பட்ட தளத்தில் முடியரசர் மூவர் என்ற நிலை
ஏற்பட்டதுடன் மற்ற முடியரசர் இருவரையும் வென்று தமிழக முதல்வர் ஆகும் அவாவும் முடியரசரையும் பேரரசையும் தூண்டின. சேரர் வரலாற்றில் நாம் கேள்விப்படும் எழுமுடியரசர்', பிற்காலச் சோழபாண்டியர் வரலாற்றிலும் கல்வெட்டுக்களிலும் அடிபடும் 'மும்முடியரசர்' ஆகிய வழக்குகளும், புராண திகாசங்களில் குறிக்கப்படும் மூவுலகாளும் மன்னர்!' 'ஏழுலகாளும் மன்னர்!' முதலிய புனைந்துரைகளும் தமிழரின் நீடித்த தேசிய அரசியல் வரலாற்று மரபின் தடங்களேயாகும்.
"போந்தே வேம்பே ஆர்என வருஉம்"
என்ற தொல்காப்பிய நூற்பா வாசகத்தில் மூவேந்தர் மலர்ச் சின்னங்களான பனை, வேம்பு, ஆத்தி ஆகியவற்றில் சேரன் மலர்ச் சின்னமான பனை (போந்தையே) முதலில் கூறப்பட்டது.
தனால் தமிழக முதன்மைப் போட்டியில் தொல்காப்பியர் காலத்திலோ, அதற்கு முற்பட்டோ, சேரனே முந்திய முதன்மை யுடையவனாக இருத்தல் கூடும் என்பர், அறிஞர் தேவநேயப் பாவாணர். இது ஆராய்தற்குரியது. ஏனெனில் இது தமிழக முதன்மையின் முந்து நிலையாகவும் இருக்கலாம்; முடியரசு நிலை பெற்றவருள் முந்தியவன் என்ற காரணமாகவும் இருக்கலாம்; தொல்காப்பியம் கேட்ட அதங்கோட்டாசான் ஊராகிய அதங்கோடும் காப்பியக்குடியும் சேரநாட்டுக்கு உரியனவா யிருந்ததாகத் தெரிவதால், தொல்காப்பியர் தன் பிறந்த நாட்டுச் சின்னத்தை முதலில் கூறியதாகவும் கொள்ளலாம். இறுதியாக, தால்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னும் சேரநாடு தென்கோடியிலோ, தென்மேற்குக் கோடியிலோ பஃறுளியாறு கடந்தே இருந்ததாகத் தெரிவதால், மூவரசுகள் தென்கோடி அல்லது மேல் கோடியிலிருந்து வரிசைப்படுத்தப் பட்டதாகவும் இருத்தல் சாலும்.