பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(112

||– –

அப்பாத்துரையம் - 16

ஐயப்பாட்டுக்குரிய இக்குறிப்பைப் பிற்கால ஆராய்ச்சிக்கு விட்டுவிட்டால், தமிழக முதன்மைப் போட்டியில் வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பழங்கால முதன்மையுடையவர்கள் பாண்டியரே என்பதை நெடியோன் மரபு காட்டுகிறது. கடைச் சங்ககாலத் தொடக்கத்தில் இருந்தவனாகத் தெரியவரும் பல்சாலை முது குடுமிப் பெருவழுதியும் இத்தகைய முதன்மையுடையவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இவர்கட்கு இடைப்பட்ட காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. வரலாற்று வானவிளிம்பிலும் புராண மரபின் அரையொளியிலும் சேரர் சோழர் முன்பின்னாக முதன்மை பெற்றிருக்கக் கூடும்.கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் 1-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலும் இதுபோலச் சோழரும் சேரரும் தலைமை நிலைக்கு முன்பின்னாகப் போட்டியிட்டிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.

இலங்கை வரலாறும் இலங்கைத் தமிழர் பண்பாட்டு நிலை யும் இக்காலப் போக்கைத் தெளியக்காட்டுகின்றன. ஏனெனில் இக்காலத்தில் அரசமரபிலும், மக்கள் மரபிலும் பாண்டிய நாட்ட வரும் இலங்கை நாட்டவரும் ஒரே தமிழ்க்குடிமக்களாகவேற்றுமை யில்லாமல் நேசத்தொடர்பு கொண்டிருந்தனர். இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டில் இந்த அடிப்படைப் பாண்டி நாட்டுப் பண்பை இன்றும் காணலாம். ஆனால், இதே காலங்களில் சோழரும் சேரருமே பெரும்பாலும் இலங்கைமீது படையெடுத்தும், ஆண்டும், புதுத்தமிழ்க் குடியேற்றங்கள் கொண்டுசென்றும் இலங்கை வாழ்வில் புது மாறுதல்களை உண்டுபண்ணினர். சேர சோழர் வலுவை எதிர்க்கப் பாண்டியர் உதவி போதாதிருந்த காரணத்தினாலேயே தமிழகம் கடந்த தொடர்பு ஊக்கப்பட்டு அதன் பயனாகத் தென்னிலங்கையின் மொழியும், பண்பாடும், அயல் பண்பாடுகளுடனும் மொழிகளுடனும் கலந்து தமிழ் நாகரிகமாகத் திரியலாயிற்று என்னலாம்.

சேரன் செங்குட்டுவன் நாட்களில் சேரர் தமிழகத்தில் முதன்மை எய்தினர். ஆனால், சங்க இலக்கிய காலத்தில் பிற்பகுதியில் மீண்டும் தலைமைப் போட்டி எழுந்து பாண்டியரும், சேரரும், சோழரும் அடுத்தடுத்துத் தற்காலிகமாக முதன்மை எய்தினர். இப்போட்டியில் மூவருமே தளர்ந்துவிட்ட நிலையில்தான், இறுதியில் மூவருமே கோட்டைவிட நேர்ந்தது.