பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

113

சோழன் நலங்கிள்ளி; நெடுங்கிள்ளி - போராட்டங்கள்

நேரிவாயில் போர் மூலம் செங்குட்டுவன் உதவியால் அரசுரிமை பெற்ற சோழன் நலங்கிள்ளி. கரிகாலன் காலமுதல் தலைநகராய் இருந்த காவிரிப்பூம்பட்டினத்திலிருந்தே அவன் ஆட்சி செய்தான். அவன் பெருவீரன், தானே பாடவல்ல புலமை யுடையவன். ஆனால், அவன் போர் வெறியும் இறுமாப்பும் தற்பெருமையும் உடையவன். பண்டைச் சோழரைப் போலவே அவனிடம் சிறந்த நிலப்படையும் கடற்படையும் இருந்தன. அவற்றின் உதவியால் பழம் புகழ்க் கரிகாலனைப்போலத் தமிழக முழுவதும் வென்று வட புலங்களையும் கீழடக்கிப் பேரரசனாக வேண்டும் என்ற பேரவா அவனுக்கு மிகுதியாயிருந்தது.

'சோணாட்டிலிருந்து வலஞ்சுற்றிப் புறப்பட்டுப் பாண்டிய நாட்டையும், சேரநாட்டையும் நீ வென்றுவிட்டதால் இனி வடக்கே படையெடுக்கக்கூடும் என்று வடதிசையரசர் நடுங்குகின்றனர்' என்று கோவூர்கிழார் அவன் கால நிலையைச் சுட்டிக்காட்டுகிறார்.

"குணகடல் பின்னதாகக் குடகடல்

வெண்தலைப் புணரியின் மான்குளம்பு அலைப்ப வலமுறை வருதலும் உண்டென்று அலமந்து

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத்தரசே,”

(புறம் 31)

வ்வரசனே பாடிய பாடல்களில் ஒன்று அரச வாழ்வு பற்றிய ஒரு புதுமைவாய்ந்த கருத்தை அறிவிக்கின்றது. அரசுரிமை என்பது தொல்லை வாய்ந்தது; பெரும் பளுவுடையது; என்று அவன் அமைச்சர் கூறி வந்தனர். 'குடிகளை வருத்திப் பணம் தேடுபவனுக்குத்தான் அரசு பெருஞ்சுமையாய் விடத்தக்கது. வலிமை வாய்ந்த அரசனுக்கு அது நீரில் மிதக்கும் கிடைச்சுப்போல இலேசானது' என்று அவன் (புறம் -75 ) கூறுகிறான். தான் வலிமை வாய்ந்த அரசன் என்ற அவன் இறுமாப்பை இது நன்கு வெளிப்படுத்துகிறது.

போருக்கெழும் சமயம் அவன் சூளுரையாகக் கூறிய ஒரு பாடலும் இதே இறுமாப்பைக் காட்டுகின்றது. ஆனால், இதில் கூட அவன் கால உயர்பண்பு தெற்றென விளங்குகிறது. 'என்