பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

|| - -

அப்பாத்துரையம் - 16

"இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன், கடுஞ்சினை வேம்பின் தெரியவோன் அல்லன், நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே! நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே!

ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே!

(புறம் 45)

“நீங்கள் இருவரும் சோழர்; ஆர் அல்லது ஆத்திமாலை அணிந்தவர்களே; எவர் தோற்றாலும் தோல்வியறியாச் சோழர் குடிக்குத்தான் இகழ் உண்டாகும்!” என்று கூறிப்புலவர் இருவரை யும் நண்பராக்கினார்.

சங்க இலக்கியப் பாடல்களால் நெடுங்கிள்ளி -நலங்கிள்ளி தொடர்பின் வரலாறு நமக்கு இதுவரைதான் விவரமாகக் கிடைக் கிறது. ஆனால், புலவர் அருமுயற்சியால் ஏற்பட்ட நேசம் நீடித் திருந்ததாகத் தெரியவில்லை; இருவருமே மீண்டும் போர்களில் ஈடுபட்டனர். இப்போர்களில் ஒன்றே காரியாற்றுப் போர். இதே டத்தில் பின்னும் போர்கள் நடந்ததால் இதை நாம் முதற் காரியாற்றுப் போர் எனலாம்.

காரியாற்றுப் போர் I

காரியாறு என்பது ஓர் ஆற்றுக்கும் ஓர் ஊருக்கும் பெயர் என்றும் தெரிகிறது. இது தமிழகத்தின் வட பகுதியில் திருவள்ளூரி லிருந்து காளத்திக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இவ்வூர் தற்போது இராமகிரி என்று வழங்கப்படுகிறது. இது தேவார காலங்களில் பாடல்பெற்ற பதிகங்களுள் ஒன்றாக இருந்தது. அதில் கோயில் கொண்ட இறைவன் பெயர் காரிக்கரை உடைய நாயனார் என்பது. ஊரின் பழைய பெயரை இது சுட்டிக் காட்டுகிறது.உண்மையில் இராமகிரி என்பது 'காரி மலை' என்ற தமிழின் இடைக்கால சமஸ்கிருத மொழிபெயர்ப்பேயாகும். காரி என்ற தமிழ்ச் சொல் கருமை நிறம் உடையது என்ற பொருளில் நஞ்சு; நஞ்சுண்ட சிவனார் நஞ்சுண்டு உடல் கரியவனான திருமால்; கருநிறமுடைய இராமன் ஆகிய பொருள்கள் உடையது. முற்காலங்களில் அயிரைபோன்ற பெயர் மலை, ஆறு, ஊர் ஆகியவற்றுக்கு ஒரே பெயராய் வழங்கியது போல, இப் பக்கங்களிலுள்ள மலை, ஆறு, ஊர் ஆகிய மூன்றும் “காரி" என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் இதனருகே ஓடும்