பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

119

அது முற்பட்ட ஏதோ ஒரு பாண்டியனாகவும், குறிப்பிட்ட போருக்கு அவனே உரியவனாகவும் இருத்தல் கூடும்.

“மையணி யானை மறப் போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடல் பறந்தலை உடனியைந்தெழுந்த இரு பெருவேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, இரங்கிசை முரசம் ஒழியப் பரந்து அவர் ஓடுபுறம் கண்ட ஞான்று

(அகம் 116)

என்பது இப்போர் பற்றிய பழம்பாடல், இரு பெரு வேந்தர்கள் படைகளும் கடல்கள் போலிருந்தன. ஆனால், அவர்கள் முறிவுற்ற பின் தத்தம் போர் முரசங்களைக் கீழே போட்டுவிட்டு ஓடினர் என்று இப்பாடலில் பரணர் கூறுகிறார்.

தலையாலங்கானத்துப் பாண்டியன் காலத்தில் பழயன் மாறன் பாண்டியர் படைத்தலைவனாய் இருந்து அருஞ் செயல்கள் ஆற்றியதாக அறிகிறோம். சேர சோழர் முதன்மைக் காலத்திலும் இம்மரபினரே பாண்டியன் படைத்தலைவனாய் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனெனில் பரணரின் மற்றொரு பாட்டுச் சோணாட்டுக்குள்ளேயே வந்து போரிட்ட பழயனைப் புகழ்கிறது.

"வென்வேல்

மாரியம்பின் மழைத்தோல் பழயன் காவிரி வைப்பில் போர் அன்ன என் செறிவளை உடைத்தலோ இலனே!”

இரண்டாம் கூடற் பறந்தலைப்போர் தலையாலங் கானத்துப் பாண்டியன் காலத்தை ஒட்டி, அதற்கு ஒரு சிறிதே முன்னதாக நடந்திருக்க வேண்டும். ஏனெனில், அதில் தோல்வியுற்ற அரசன் சோழன் கிள்ளி வளவன். வெற்றி பெற்றவனோ தலையாலங்கானத்துப் போரிலேயே பாண்டியர் படைத்தலைவனாய் இருந்த பழயன்மாறன். இப்போர் பற்றிய பாடலையும் சிலர் தலை யாலங்கானத்துப் போர் பற்றியதாகவே கொள்வதுண்டு. ஆனால், இதனைப்பாடிய புலவர் பரணர், தில்

ல்

சோழன் மட்டுமே போரில் ஈடுபட்டுத்