பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

அல்லது

படையெடுத்த

அப்பாத்துரையம் - 16

எதிரிகளை முறியடித்துத்

துரத்திச்சென்று தலையாலங்கானத்தை யடைந்ததும், நெருக்கித் தாக்கியிருக்கக் கூடும், எவ்வாறாயினும் பாண்டியன் எழுவரையும் விஞ்சிய வீரமுடையவனாய் இருந்தான் என்பது எளிதில் போதரும்.

எதிரிகள் பல திசையினர் ஆதலால் சோணாட்டில் தலையாலங்கானத்திலேயே அவர்கள் ஒருங்கே கூடிப் புறப்பட ஏற்பாடு செய்திருக்கவேண்டும். அவர்கள் கூடுமிடத்திலேயே நெடுஞ்செழியன் அவர்களைத் துணிவுடன் சென்றெதிர்த்தான் என்பதே பொருத்தமுடையதென்று தோன்றுகிறது.

போர் தொடங்கும் சமயம் பாண்டியன் எவ்வளவு இளைஞனாயிருந்தான் என்பதை இடைக்குன்றூர் கிழார் என்ற புலவர் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

“கிண்கிணி களைந்தகால், ஒண்கழல் தொட்டு;

66

குடுமி களைந்த நுதல், வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து;

குறுந்தொடி கழித்தகை, சாபம் பற்றி

நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்- யார் கொல்?”..

....................

(புறம் 77)

கிண்கிணி யணிந்து விளையாடும் குழந்தை அதை அவிழ்த்து வீரக்கழல் அணிந்திருக்கிறான்; பிள்ளைக்குடுமி

போதுதான் களைந்திருக்கிறது; அதன்மேல் மரபுச் சின்னமாகிய வேப்ப மாலையையும் போர்ச்சின்னமாகிய உழிஞையையும் சுற்றியிருக்கிறான்; கையில் இருந்த காப்பைக் காணோம்; அதற்குப்பதில் வில் இருக்கிறது; இத்தகைய போர்த் தோற்றத்தையுடைய சிறுவன் ஒருவன் தேர் மோட்டைப்பற்றி நிற்கிறானே, அவன் யாரோ?” என்று புலவர் அழகு நயம்படக் கேட்கிறார். சிறு பிள்ளையாயிருந்தாலும் போர் கண்டு அவன் சிறிதும் இமையாடவில்லை. அதே சமயம் அவன் வெற்றிகூட அவனிடம் பெருமையை உண்டு பண்ணவில்லை' என்றும் புலவர் குறிக்கிறார். 'மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் இலனே' என்ற சொற்கள் இந்நிலையைச் சித்திரிக்கின்றன.