பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

“மெய்த்திரு வந்துற்றபோதும் வெந்துயர் வந்துற்றபோதும் ஒத்திருக்கும் உள்ளத் துரவோன்

123

(நளவெண்பா)

என்ற தருமனைப் பற்றிய புகழேந்தியார் வருணனையையே இவ்வடிகள் நினைவூட்ட வல்லன.

நெடுஞ்செழியன் படைகள் பெரியனவாயிருந்தாலும், ஏழுபடைகள் திரண்ட எதிரியின் படைப்பெருங்கடலை நோக்க, அது மிகச் சிறிதாகவே யிருந்தது. எனவே போர்த் தொடக்கத்தில் எவரும் எதிரிகளின் வெற்றியையே எதிர்பார்த்திருக்க முடியும்.

ஆனால், பாண்டியன் மதுரைவாயில் வெளியிலுள்ள பொய்கையில் குளித்துத் தாரும் கண்ணியும் படைக்கலங்களும் சூடிப்போர்க்களத்துக்கு வந்த சமயம், அவனுடனிருந்த டைக்குன்றூர்க் கிழார் "எதிரிகள் பிழைப்பார்களோ” என்றே குறிக்கிறார்!"

“மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி......

வெம்போர்ச் செழியனும் வந்தனன் - எதிர்ந்த

வம்ப மன்னரோ, பலரே!

எஞ்சுவர் கொல்லோ பகல், தவச் சிறிதே!”

எத்தனைபேர்

(புறம் 79)

ளையன் என்று தன்னை ஏளனமாகக்கருதி, வெற்றி தமதே என்ற இறுமாப்புடன் படையெடுத்த எதிரிகளைக் கண்டு பாண்டியன் கடுஞ்சினம் கொண்டான்.“அவர்களைச் சிதறடித்து அவர்கள் முரசங்களைக் கைக்கொள்வேன்; கொள்ளாவிட்டால் நான் கொடுங்கோலனாகுக; புலவர் என்னைப் பாடாதொழிக; இரவலர்க்கு ஈயாத பண்புடையவனாகுக!” என்று வஞ்சினம் கூறுகிறான். இவ்வஞ்சினம் அவனே இயற்றிய ஒரு புறப்பாடலாக நமக்குக் காட்சி தருகிறது.

"நகுதக் கனரே நாடு மீக்கூறுநர்!

இளையன் இவன் என உளையக் கூறி.. சிறு சொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரச மொடு ஒருங்கு அகப் படேஎன் ஆயின் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக......