பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

||--

அப்பாத்துரையம் - 16

புலவர் பாடாது வரைக என் நிலவரை!...

இரப்போர்க் கீயா இன்மை யான் உறவே!”

தமிழகம் முன் என்றும் கண்டிராத கம்பலை

(புறம் 72)

போரில் எதிரிப்படைகள் பல கடல்கள் உடைத்தேரடி வருவதுபோல ஆரவாரித்த வண்ணம் வந்த நிறைந்தன. பாறைகள்மீது மோதும் பேரலைகள்போல அவை பாண்டியன் படைகள்மீது வந்து வந்து மோதின. ஆனால், ஒரு பகலுக்குள் அவ்வணிகள் யாவும் அலைகள் போலவே சிதறின.பாண்டியன் தேர்ப்படைகளும், யானைப் படைகளும் எதிரிகளின் படைகளை உழுநிலமாக்கி எங்கும் உழுதன; வில்வீரர் வெற்றி விதைகளாகிய அம்புகளை எங்கும் தூவி விதைத்தனர்; குதிரை வீரர்கள் பொலி எருதுகள் கதிர்களை மிதித்துத் துவைப்பதுபோல எதிரிகளின் உடலங்களை எங்கும் சவட்டி அழித்தனர்; எதிரிகள் சிதறி ஓடத் தலைப்பட்டனர். கிலியினால் ஒருவர் மீதொருவர் உந்தியும் முந்தியும் தாறுமாறாகக் குழம்பி ஆர்ப்பரித்தனர்.

அவர்கள் எழுப்பிய இந்த ஆரவாரம் போர்க்களத்துடன் நிற்கவில்லை; நாடெங்கும் பரந்தது; அதுபோன்ற கம்பலையைத் தமிழகம் அதற்குமுன் என்றும் கேட்டதில்லை. அத்துடன் இரண்டா யிரம் ஆண்டு சென்ற பின்னும் தமிழர் காதுகளில் அது இன்னும் ஒலிக்கும்படி சங்க இலக்கியப் பாடல்கள் பல அதனை நமக்கு பதிவுசெய்து தந்துள்ளன.

66

“கால் என்னக் கடிதுரா அய்

நாடு கெட எரிபரப்பி,

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,

அரசு பட அமர் உழக்கி,

முரசுகொண்டு களம்வேட்ட

அடுதிறல் உயர் புகழ்வேந்தே!”

(மதுரைக் காஞ்சி 125 - 130)

என்று போர் வெற்றிகொண்ட மன்னனை மாங்குடி மருதனார் பாராட்டியுள்ளார்.

'பாண்டியன் இளையன்; போர் அனுபவமற்ற முதிராச் சிறுவன்; அவனை எதிர்த்தவரோ களங்கண்ட காவலர்; பேராற்றல் மிக்க பேரரசரும் வீர வேளிரும் ஆவர். அவன் ஒருவன்,