தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
125
அவர்கள் எழுவர்! இது கோழமைமிக்க அநீதி; ஆனால், பேராற்றல் மிக்கவர் அநீதிச் செயல்' என்று அந்நாளைய தமிழர் எண்ணினர். ஆயினும் பாண்டியன் இந்த அநீதியையும் ஆற்றலையும் ஒருங்கே சிதறடித்துத் தமிழ் வானில் இருள் கீண்டெழும் ஒரு புது ஞாயிறாகப் பொலிவுற்றான். இதையே,
"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும் புதுவது அன்று, இவ் உலகத்து இயற்கை! இன்றின் ஊங்கோ கேளலம்....
பசும் பூட் செழியம்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!”
(புறப் 76)
என்று ஒருபுலவர் வியந்துரைத்தனர்.
“புலிகளை அகப்படுத்த வேட்டுவர் பொருத்தி வைக்கும் கல் அடார் அல்லது பாராங்கல் பொறி போன்றவன் பாண்டியன் என்பது தெரியாமல் மாற்றார் அவனிடம் வந்து சிக்குண்டனர்’ என்று ஒரு புலவர் (குடபுலவியனார், புறம் 19-ல்) அவனைப் பாராட்டினார். எதிரிகளாகிய அரசர், வேளிர், வீரர் ஆகியவர்கள் செய்த குற்றத்துக்கு அவர்கள் மனைவியர்கள் தம் கூந்தல் களைந்து கைம் பெண்கள் ஆகும்படி செய்யலாமா?' என்று வேறொரு புலவர் (கல்லாடனார், புறம் 25-ல்) வசை மொழி கூறுவதுபோல இசைமொழி புகன்றார். மற்றும் ஒரு புலவர் (மாங்குடி மருதனார் புறம் 26-ல்) 'உன்னுடன் போர் செய்தவர்கள் நற்பேறுடையவர்கள். ஏனெனில் தத்தம் முரசங்களை மட்டும் உன்னிடம் தந்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தாங்கள் பொன்னுலகம் பெற்றுவிட்டனர்!” என்று கேலி நயம்படப் புகழ்ந்தார்.
படையெடுப்பாளர்களைத் திருப்பி ஓட்டுவதுடன் பாண்டி யன் மனநிறைவு பெறவில்லை. அவர்கள் நாடுகள் தோறும் சென்று தாக்கி அவர்கள் கொட்டம் அடக்கித் தன் ஆற்றலையும் ஆட்சி எல்லையையும் விரிவுபடுத்த எண்ணினான். தலையாலங் கானத்தில் அவனுடன் இருந்து படைத்தலைமை வகித்தவன்