பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

|| - -

அப்பாத்துரையம் – 16

பழையன். ஆனால், வேறுபல படைத்தலைவர்களும் அவனிடமிருந்து போர் உடற்றினர். அவர்களில் ஒருவன் அதுகை என்பவன். அவன் தலைமையில் பாண்டியன் ஒரு படையைச் சோழ நாட்டைத் தாக்கும்படி அனுப்பினான். தலையாலங்கானப் போரிலோ அல்லது அதனையடுத்த தாக்குதலிலோ சோழன் பெரும்படைத் தலைவனும் மிழலைக் கூற்றத்தின் வேளுமான எவ்வியை, அதுகை தாக்கிக் கொன்றான் (புறம் 233). அவனுக்குரிய மிழலைக் கூற்றமும் பாண்டிய நாட்டின் எல்லையுடன் சேர்க்கப்பட்டது. இச் சோணாட்டுத் தாக்குதலுக்குப்பின் பாண்டியன் சேர நாட்டின் மீது படையெடுத்தான். சேரமான் யானைக்கட்சேய் சிறைப்பட்டான். அவன் படைத்தலைவனான அழும்பில்வேள் போரில் மாண்டான். அழும்பில் வேளுக்குரிய நாடும் பாண்டிய நாட்டுடன் சேர்க்கப் பட்டது.

“நல்லூர்க் கெழீஇய

ஒம்பா ஈகை மாவேன் எவ்வி

புனலம் புதவின் மிழலையொடு

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்

குப்பை நெல்லின் முத்தூறு தந்த

கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய!

(புறம் 24)

என்ற மாங்குடி கிழாரின் பாட்டு மிழலை, முத்தூற்றுக் கூற்ற வெற்றியையும்,

"அழும்பில் அன்ன நாடிந்தனரும்'

(மதுரைக் காஞ்சி 345)

என்ற மதுரைக் காஞ்சியுரை அழும்பில் வெற்றியையும் குறித்துள்ளன.

தலையாலங்கானத்துப் போரிலோ, அதற்குப் பிற்பட்ட ஒரு படையெடுப்பிலோ சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை சிறைபட்டான். இச்சேரமான், ஒரு பாட ச்சேரமான், ஒரு பாடல்சான்ற பெரும்புகழ்ப் பேரரசன். அவன் எப்படியோ தன் ஆற்றல் காட்டிச் சிறையி னின்றும் தப்பியோடித் தன் நாடு சென்று இழந்த புகழை மீட்டும் பெற்றுவிட்டான். அவனைப் பலபடப் பாராட்டிப் பாடியுள்ள புலவர் பலர். அவருள் ஒருவரான குறுங்கோழியூர் கிழார் (புறம் 170-ல்) சிறைப்பட்டபின் விடுபட்ட அவன் திறத்தையும் ஓர்