128
அப்பாத்துரையம் - 16
ஒருவன் சற்றுப் பின்னாக நின்று ஏந்திக்கொண்டு வருகிறான். போரில் வீரம் காட்டிய புதுப்படை வீரன் ஒருவன் இளந்தோள் மேல் அவன் வலதுகைகிடக்கின்றது. இடது தோளிலிருந்து நழுவும் டது கை பற்றியும், பற்றாமலும்
மேலாடையை பிடித்திருக்கின்றது.
போர் வெற்றியினால் அவன் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச் சியை இறந்தவர், புண்பட்டவர் பற்றிய எண்ணம் அகற்றியிருக் கிறது.ஆனால், பிறருக்கு அதைக் காட்டாது மறைத்து அவன் ஒரு முகமலர்ச்சியை வருவித்துக் கொள்கிறான். காயம் பட்டவர் களிடம் அவன் கனிவுடன் அவர்கள் நோவுபற்றியும், உடல்நிலை வாய்ப்புகள் பற்றியும் பேசி ஆறுதல் தருகிறான். புகழ்பெற்ற வர்களை அவன் பாராட்டுகிறான்.
இக்காட்சி தமிழிலக்கியத்தில் மட்டுமல்ல, உலக கியத்திலேயே ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நில மிசை புரள,
களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தணவளி எதிர்தொறும் நுடங்கி... பாண்டில் விளக்கின் பருஉச்சுடர் அழல, வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு, முன்னோன் முறைமுறைகாட்ட..... எறிதுளி விதிர்ப்ப,
புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை அமைந்த கையன், முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப,
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே!
லக்
(பத்துப்பாட்டு:நெடுநல் வாடை: 169-173,175-177,180-188)