பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 16

132 ||- இடத்தில் நிகழ்ந்த ஒரு போரில் அவன் உயிர் இழந்தனனாகலாம். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று பின்னாளில் அவனக்கு வழங்கிய பெயர் இதனைக் காட்டுகிறது.

குளமுற்றம் ஒரு போர்க்களத்தின் பெயரன்று; சோழன் சென்று தங்கியிருந்த ஓர் இடப் பெயரே என்று கருதுபவரும் உண்டு.

திருக்கோவலூர்ப் போர் II

பேரரசுகளின் வல்லமைப் போட்டிகளிடையே சிறிய அரசு களும் அவற்றை ஒத்த முக்கியத்துவம் பெறுவது இயல்பு, சங்க காலத் தமிழக வேளிர் வகையில் இது முற்றிலும் உண்மையாகும்.

அதியமான் மரபினர் சங்ககாலத்தில் மட்டுமின்றி, பிற்காலச் சோழ பாண்டியப் பேரரசர் ஆட்சியிலும் வலிமை வாய்ந்த சிறு வல்லரசாய் இருந்தவர்கள். சங்ககாலத்தில் அதியமான் நெடுமானஞ்சி தமிழகத்தின் தலைசிறந்த பெண்பாற் புலவரான ஔவையாரை அவைப் புலவராகவும், அமைச்சரது நிலையில் அறிவுரையாளராகவும், தன் அரசியல் தூதராகவும் கொண்டிருந்தான். அவன் தலைநகர் தகடூர் என்பது; அது இந்நாளில் சேலத்திலுள்ள தருமபுரிக்கு அருகில் இருந்ததென்று தோன்றுகிறது. இன்று பாழுங் கோட்டையாகக் கிடக்கும் அதமன் கோட்டை என்ற பெயர் அதியமான் கோட்டை என்பதன் மரூஉவே என்று தெரிய வருகிறது.

அதியமானைப் போலவே வலிமை வாய்ந்த மற்றொருவேள் மலையமான். அவன் தற்காலத் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையிலுள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டிருந்தான். அவன் பெயர் காரி. இந்தக் காரி கிள்ளிவளவனால் கொல்லப்பட்ட காரியானால், கிள்ளிவளவன் ஆட்சியோ, தலையாலங்கானத்துப் பாண்டியன் ஆட்சியோ நாம் மேலே கொண்டதைவிடப் பிற்பட்டதாயிருக்க வேண்டும். ஆயின் இந்தக் காரி அவன்மரபில் பின் வந்தவனாகவும் இருக்கலாம்.

அதியமான் தன் நாட்டை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் கோவலூர் மீது படையெடுத்தான்.

கோவலூர்ப் போரில் அதியமான் வெற்றி கண்டான். காரி