தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
133
நகர் விட்டு ஓடினான்.கோவலூர் அதியமான் நெடுமானஞ்சியின் ஆட்சிக்குள்ளாயிற்று.
தகடூர்ப் பெரும்போர்
கோவலூர்ப் போரில் தோற்றோடிய காரி சேரனிடம் தஞ்சமடைந்தான். இக்காலச் சேரன் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துக்குரிய பெருஞ்சேரல் இரும்பொறை ஆவன். அவன் இச்சமயம் தன் நாட்டெல்லையில் இருந்த வலிமை வாய்ந்த வேளான ஓவியர் தலைவன் ஓரியை வெல்லவும், அவனுக்குரிய கொல்லி மலையைக் கைக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தான்.காரி சேரன் படைத் தலைமையில் தானே சென்று ஓரியைத் துரத்திவிட்டுக் கொல்லி மலையைச் சேரனுக்குச் சேர்ப்பித்தான். முன்பு தோற்றோடிய காரி சேரனிடம் தஞ்சம் புகுந்தது போலவே, ஓரி இப்போது அதியமானிடம் தஞ்சம் புகுந்தான். அதன்மீது சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையும் மலையமான் காரியும் சேர்ந்து அதியமான் தகடூர் மீது படையெடுத்தனர்.
அதியமானுக்கும் ஓரிக்கும் உதவியாகப் பாண் பாண்டிய அரசனும் சோழ அரசனும் வந்து துணை தந்தனர் என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.
“கொல்லிக் கூற்றத்து நீர்கூர்மீமிசை
பல்வேல்தானை அதிகமானோடு
இருபெரு வேந்தரையும் உடன்நிலைவென்று
முரசும்குடையும் கலனும் கொண்டு
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு
துகள் தீர்மகளிர் இரங்கத் துப்பு அறுத்துத்
தகடூர் எறிந்து..."
(பதிற்: பதிகம் 3 – 9)
என்று சேரன் அடைந்த பெரு வெற்றியைப் பதிகம் சற்று
விரிவாகவே கூறுகிறது. பாட்டு மூலத்திலும்,
“வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பில் தகடூர் நூறி”
என்ற அடிகள் இவ்வெற்றியைக் குறிக்கின்றன.