134
அப்பாத்துரையம் - 16
இப்போரைப்பற்றிச் சங்க இலக்கியம் என்ற பாடல் திரட்டில் சேராமல், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தனிப் பாடலான தகடூர் யாத்திரை என்ற பாட்டு ஆக்கப்பட்டிருந்தது என்று அறிகிறோம். இது நமக்கு முழுதும் கிடைக்கவில்லை. ஒரு சில பாக்களே கிடைத்துள்ளன. சங்கப்பாடல்களைப் போலவே இதிலும் திலும் பாடல்கள் பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களால் பாடப் பட்டன என்று தோன்றுகிறது. பாடிய புலவர்களுள் ஒருவர் பதிற்றுப்பத்தில் இச்சேர மன்னனைப் பாடிய அரிசில்கிழாரே என்பது குறிக்கத்தக்கது.
தகடூர்ப் போர்பற்றிய தகடூர் யாத்திரை தரும் வரலாற்றுக் கும்,பதிற்றுப்பத்துப் பதிகத்தில் கண்ட வரலாற்றுக்கும் இடையே சில முக்கிய கூறுகளில் வேற்றுமைகள் உள்ளன. பதிற்றுப்பத்துத் தகடூரில் போர் புரிந்த தலைவன் அதிகமான் என்று மட்டுமே குறிக்கின்றது. ஔவையார் பாடல்கள் மூலம் இது நெடுமான் அஞ்சி என்று தோன்றுகிறது. ஆனால், தகடூர் யாத்திரையில் அது அவன் மகன் எழினி என்று கூறப்படுகிறது. தவிர பதிற்றுப்பத்தின் பதிகம் இரண்டரசர் உதவிபற்றிக் குறிக்கிறது.மற்றப் பாடல்களில் அக்குறிப்பு இல்லை.
தகடூர் முற்றுகை அஞ்சி காலத்திலும், சில நாட்களுக்குப் பின் மகன் காலத்திலும் இரண்டு தடவை நடந்ததோ என்று கருத இது இடம் தருகிறது. முதல் முற்றுகையில் அஞ்சி இறந்தான். இதை ஔவையார் பாடியுள்ளார். சேரமான் வெற்றி பெற்றாலும் நாடு நகர்களை அழிக்கவில்லை. நாட்டைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இரண்டு அரசர்களும் சேர்ந்து படையெடுப்பில் அதிகமானுக்கு உதவி செய்த போர் இதுவே யாதல் வேண்டும். இரண்டாவது முற்றுகை சேரன் ஒருவனால் மட்டுமே நடத்தப் பட்டது. அதன் வெற்றியின் பின்பே கோட்டையழிக்கப்பட்டு,நாடு கைக்கொள்ளப்பட்டதாகல் வேண்டும்.
ஒரு
எழினியின் தலைமையில் நடைபெற்ற கோட்டைப் பாது காப்புப் போரில், அவன் படைத்தலைவன், பெரும்பாக்கன் என்ற வீர ளைஞன் என்று அறிகிறோம். அவன் எதிரிபடைகளைக் கோட்டைக்குள்ளிருந்து தாக்கவில்லை. துணிச்சலுடன், கோட்டைக்கு வெளியே படையுடன் வந்து