தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
135
எதிர்த்தான்.அத்துடன் இறுமாப்புடன் தன் படையின் முன் வந்து நின்று எதிரிப்படைகளை எதிர்ப்பார்த்து நின்றான்.சேரனுடன் களஞ் சென்றிருந்த அரிசில் கிழார், பொன் முடியார் என்ற இரு புலவர்களும் அவனை அரசனுக்குச் சுட்டிக் காட்டிப் பேசிய பேச்சுக்களையும் போர் விவரங்களையும் தகடூர் யாத்திரை நமக்கு நேர்முகக் காட்சிகளாகத் தருகின்றன.
"அதோ கருந்தாடியுடைய அந்த அஞ்சா நெஞ்சன் தன்கையில் உள்ள வேலையும் நம்மையும் பார்த்து இறுமாப்புடன் சிரிக்கிறான்,' என்கிறார் ஒரு புலவர். ‘அந்த வீர இளைஞனால் வீறுமிக்க யானைகளைக்கூட வீழ்த்த முடியும் என்று தோற்றுகிறது' என்கிறார் மற்றொரு புலவர்.
முதல் நாளிலேயே கோட்டைக்கு வெளியிலுள்ள போர் முடிந்துவிட்டது.
தகடூர்ப் படைகள் பேரழிவுடன்
கோட்டைக்குள் பின் வாங்கின. சேர வீரர்கள் காவல் காட்டை அழித்தனர். மறுநாள் கோட்டைக்குள் சென்றனர்.
போரின் நேர்முகக் காட்சியாக நமக்குக் கிட்டியுள்ள தமிழ்ப் பாடல் தகடூர் யாத்திரை ஒன்றே என்னலாம். ஆனால், அது நமக்கு அரைகுறை வடிவிலேயே கிடைத்துள்ளது.
கானப் பேரெயில் அழிவு
ய
கானப் பேரெயில் என்பது, பாண்டிய நாட்டில் பண்டைக் காலத்தில் நிலவிய ஒரு வலிமை வாய்ந்த கோட்டை கானப் பேர் என்பது இந்நாளைய காளையார்கோயிலே என்று ஆராய்ச்சி யாளர் முடிவு கண்டுள்ளனர். அதன் கோட்டை மதில்கள் வெல்ல முடியாதவை என்று சங்க காலங்களில் கருதப்பட்டிருந்தன. அதன் தலைவனான வேங்கை மார்பன் இது பற்றிப் பெரிதும் தருக்குடையவனாயிருந்தான்.பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அதை வென்று வேங்கை மார்பன் தருக்கை அடக்கினான். இக்காரணத்தாலேயே அவன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்றும், கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதி என்றும், கானப் பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்றும் அழைக்கப்பட்டான்.
கானப் பேர் எயில் எறிந்த வெற்றியை ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் (புறம் 21ல்) பாடியுள்ளார். பழுக்கக் காய்ச்சிய