பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

|| - -

அப்பாத்துரையம் - 16

இரும்பில் சுவறிய நீரை யாரும் இரும்பிலிருந்து மீட்க முடியாது. கானப் பேரெயிலையும் அதுபோலவே பாண்டியனிடமிருந்து மீட்க முடியாது என்று வேங்கை மார்பன் மறுகினான் என்று புலவர் கூறுகிறார். புலவர் பலர் அவனைப் பாடினாலும் அப்பாடல்களின் புகழ் மாட்சி கடந்து அவன் வெற்றி மாண்புடையதென்றும் அவர் அவனைச் சிறப்பிக்கிறார்.

சங்க காலப் பாண்டியருள் கடைசிப் பாண்டியன் என்று இவன் கருதப்படுவதுண்டு. தமிழக வாழ்வில் ஏதோ ஒரு மாறுதல் இவனுக்குப் பின் சங்கம் நீடிக்காமல் செய்திருக்க வேண்டும்.

அகநானூற்றை உப்பூரிகுடிகிழகர் மகன் உருத்திர சன்மனால். தொகுக்கும்படி செய்த பாண்டியன் இவனே என்றும் கருதப் படுகிறது. நற்றிணையும், குறுந்தொகையும் அவன் காலத்துக்கு முன்பே தொகுக்கப்பட்டிருந்தன என்று தெரிய வருகிறது. (பக். 80. தொகை நூல்களின் கால முறை: இலக்கிய தீபம்: எஸ். வையாபுரிப்பிள்ளை)

கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் சேரமான் மாரி வெண்கோவும் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியுடன் ஒருங் கிருந்த காட்சியை ஒளவையார் (புறம் 367 )பாடியுள்ளார்.

கழுமலப் போர்

சங்க காலத்திறுதியிலேயிருந்த சோழன் செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையுடன் கழுமலத்தில் போர் புரிந்ததாக அறிகிறோம். கணைக்கால் இரும்பொறை சோழனது குடவாயில் கோட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டதாகவும், நீர் கேட்டபோது சிறைக்காவலர் அவனை மதியாது காலந் தாழ்த்தியதால் அவன் தன்மான உணர்ச்சிகொண்டு உணவுநீர் மறுத்து உயிர் விட்டான் என்றும் தமிழ் மரபுரை கூறுகிறது. ஆனால், கணைக்கால் இரும்பொறையின் பாடல் ஒன்று (புறம் 74) சங்க இலக்கிய எல்லையிலேயே அவன் இச்சமயம் கூறிய மாள்வுரையாகக் காட்சி தருகிறது.

மற்றொரு மரபு சேரமானை விடுவிப்பதற்காகப் பொய்கை யார் என்னும் புலவர் கழுமலப் போர் பற்றிக் களவழி என்ற ஒரு நூல் இயற்றியதாகக் கூறுகிறது. ஆனால், களவழி இயற்றிய பொய்கையார், சங்க இலக்கியத்திலேயே சேரன் கோக்கோதை