தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
137
மார்பனைப் பாடிய பொய்கையார் அல்லவென்றும் வரலாற்றா சிரியர் பலர் மறுக்கின்றனர்.
செங்கணான் எழுபதுக்கு மேற்பட்ட சிவன் கோயில்களும், சில திருமால் கோயில்களும் தமிழகம் எங்கும் கட்டியதாகவும் திருமங்கையாழ்வார் குறித்துள்ளார்.
னம்
செங்கணான் சங்ககாலத் தமிழகத்தின் கடைசிச் சோழனாயிருத்தல் வேண்டும். ஆராய்ச்சியாளர் பலர் அவனை ஐந்தாம் நூற்றாண்டினன் என்று கருதுகின்றனர். இங்ஙன கருதுவதற்குச் சரியான காரணம் கிடையாது. கோயில்கள் சங்க காலத்தில் கட்டப் பட்டிருக்க முடியாது என்ற அவர்கள் கருத்தே இதற்கு வழி வகுத்தது. இம்மறுப்புச் சங்ககாலத் தொடக்க நிலைக்கே பொருந்தும், கடைசிப் பகுதிக்கன்று என்னலாம்.
களப்பிரர் படையெடுப்பு
சங்ககால இலக்கிய மரபு, பண்பாட்டு மரபு ஆகிய இரண்டும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்குள் தடமில்லாமல் அழிந்தன என்னலாம். சங்க இலக்கியங்கள் அதன் பின் ஒரு சில புலவர்களுக்குள்ளாகப் பூட்டி வைக்கப்பட்டே பேரளவில் அழிந்து ஒரு சிறு பகுதியளவில் நம்மை வந்தெட்டியுள்ளதைச் சங்கத்துக்கும் பிற்பட்ட இலக்கியத்தில்கூட முன்னைய மரபு பேணிய இலக்கிய மரபு தேய்ந்து தேய்ந்து வந்ததால், அதிலும் மிகச் சிறு பகுதியே நம்மை வந்தெட்டியுள்ளது. மரபிலும் பண்பிலும் மிகுதி மாறுபட்ட இலக்கியமே தழைத்துள்ளது. மக்கள் பண்பாடும் சங்க காலத் தமிழர் இனமறிய முடியாத நிலையில் மாறியுள்ளது.
இப்பெருமாறுதலுக்குக் காரணமான அரசியல் நிகழ்ச்சி களப்பிரர் படையெடுப்பே ஆகும். இக்களப்பிரர் யார்? என்ன காரணமாகத் திடுமெனத் தமிழகத்துக்குள் படையெடுத்தனர்? என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரிய செய்தியாகவே இருக்கிறது. ஆனால் அவர்கள், தமிழகத்தின் வட எல்லையில் இன்று கன்னட நாடு என்றும் தெலுங்கு நாடு என்றும் அழைக்கப்படும் வடுக நாட்டின் தென் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிச் சாய்ந்த நாடோடிக் குடிகளாவர். அவர்கள் படையெடுப்பும் ஆதிக்கமும் கி.பி. 250 க்கும் கி.பி. 550 க்கும் இடைப்பட்ட