பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

|– –

அப்பாத்துரையம் - 16

களப்பிரர் தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் அயலானவராய் இருந்தனர் என்பதை நாம் ஒத்துக்கொள்ள முடியும்.ஏனெனில் படையெடுப்புக்குப் பிற்பட்ட தமிழர் ஆதாரங்கள் அவ்வாறே குறிக்கின்றன. அவர்கள் பெரிதும் சமண சமயத்தவராய் இருந்தனர் என்றும் அறிகிறோம். அசோகன் புத்த சமயத்தையே இலங்கை வரை பரப்பினாலும், சமண சமயமும் அவன் காலத்துக்குள்ளேயே மேல் வடுக நாடு அல்லது தற்காலக் கன்னடநாடுவரை பரவியிருந்தது. புத்த சமயமோ பெரிதும் கீழ்கரை வழியாகவே வந்தது. களப்பிரர் கன்னடப் பகுதியிலிருந்தே வந்தனர் என்பதை இது காட்டுகிறது.

பதிற்றுப் பத்துச் சேரர்களில் ஒருவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அவன் தண்டாரணியம் என்ற வடுக புலக் காடுகளை வென்றான் என்று அறிகிறோம். இதுபோலவே ஆந்திரரின் தென்திசை ஆட்சித் தலைவரும், கரிகாலன் காலமுதல் சோழரும், இப்பகுதியில் நிலையான குடி வாழ்வு நிறுவப் பாடுபட்டனர். பிற்பட்ட சங்ககாலச் சோழர் பலர் ஆண்ட நாட்களில் இந் நாடோடிகளின் உதவியே போர்களை வடஎல்லைக்குக்கொண்டு வந்திருந்தன என்று கண்டோம். கி.பி. 250-ல் இப்பகுதியின் முத்திசையிலும் பேரரசுகள் சரிந்தன. அதே சமயம் கி.பி.250 முதலே விந்திய மலைக்கு அப்பாலிருந்தும், சிந்து ஆற்றுக்கு அப்பாலிருந்தும் பண்டை ஆரியரை ஒத்த நாடோடிகள் மேலை இந்தியா, நடு இந்தியா கடந்து தெற்கு நோக்கி நெருக்கினர். வ்வுந்துதலின் பயனாகவும் முன்னைய எதிர்ப்புக்களின் பயனாகவும் வளமான தமிழகத்தின் மீது சரிந்த வடுக நாடோடிக் குழாத்தினரே களப்பிரர் ஆவர்.

சி

காஞ்சியில் சோழர் ஆட்சிச் சரிவின்பின் எழுந்த புது ஆட்சியாளரே ஆந்திரர் கீழ்ச்சிற்றரசராக இருந்த பல்லவர். இவர்கள் ஆட்சி தொடங்கியது கி.பி. 250லேயே. அதுவே முதலில் களப்பிரர் தாக்குதலால் சரிவுற்றுச் சிலகாலம் வடக்கே ஒதுங்கி நின்றது. விரைவில் சோணாடும், பாண்டி நாடும் இதே தாக்குதலுக்குள்ளாயின.

டைக்காலப் பாண்டியப் பேரரசருக்குரிய ஆதாரங் களான வேள்விக்குடிச் செப்பேடுகளும், சின்னமனூர் செப்பேடு களும் இக்களப்பிரர் படையெடுப்புப் பற்றியும் அதனால்