பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142 ||.

அப்பாத்துரையம் - 16

மேற்கும் பழம் பண்பாட்டு வளத்தில் பிற்பட்டதற்கு ப் பண்படாத் தாக்குதல்களே காரணம் ஆகும்.

வடமேற்குத் திசையிலிருந்து வந்த இந்த அலைகளில் முதற் பேரலை கி.மு. 5,3-ஆம் நூற்றாண்டுகளில் பாரசீக, கிரேக்க படை யெடுப்புகளுடன் முடிவடைகின்றது. இதனால் தமிழகம் கடந்த மாநில நாகரிக வாழ்வு முற்றிலும் அழிந்துவிடவில்லை. கீழ் கோடியில் மகத நாகரிகம் ஆரிய இனத்துடன் கலப்புற்றுத் தன்னை ஆரிய நாகரிகம் என்றே அழைத்துக் கொண்டாலும், அது பழைய நாகரிகத்தின் ஒரு புதுமலர்ச்சியாகவே நிலவிற்று. இதனைப் பழைய ஆரிய நாகரிகம் அதாவது புத்த -சமண, பாளி- பாகத கால ஆரிய நாகரிகம் என்னலாம். இது தமிழகப் பண்பாட்டுடனும் ஆந்திர -கலிங்கப் பண்பாட்டுடனும் இழைந்து, அவற்றின் நிலவொளியிலும் தென்றலிலும் வளர்ந்ததாதலால், அவற்றுடன் இணைந்து ஒரே நாகரிகக் கொடியாய் இலங்கிற்று. வடமேற்கிலிருந்து வந்த புது அயல் பண்பாடுகளின் தாக்குதலை எதிர்த்துச் சமாளிக்கும் வகையில் அந்நாகரிகங்கள் தமிழகத்தின் உதவியையும் ஒத்தாசையையும் நாடின.

கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையும் வடமேற்கிலிருந்து யூச்சியர், குஷாணர், பார்த்தியர், படையெடுத்தனர். அவர்கள் வடமேற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் பல பேரரசுகளையும் அரசுகளையும் அமைத்து விரைந்து பரவினர். மாநில வாழ்வு இதனால் மீண்டும் கலகலத்தது. அது மட்டுமன்று. இதுவரை அயல் அலைகளால் பாதிக்கப்படாதிருந்த கீழ் திசை நாகரிகக் கொடியையும் அவை பாதிக்கத் தொடங்கின. அக்கீழ் திசைக்கொடி இதுவரை தமிழகத்தையே தலைமையகமாகவும் உயிர் நிலையாகவும் கொண்டு, ஒன்றுபட்ட ஒரே நாகரிகமாக வளர்ந்து வந்தது. புதிய அலை அதனைத் துண்டுபடுத்தி, இருவேறு வகைப்பட்ட வளர்ச்சிகளாக்கிற்று. க்கிற்று. இரண்டிலும் பெருத்த மாறுபாடுகளை உண்டுபண்ணிற்று.

வடதிசையில் பாளி-பாகத மொழி சார்ந்தும், புத்தசமண சமய நெறிகள் சார்ந்தும் வளர்ந்த மகத நாகரிகத்தில் முதலில் மொழி மாறுபட்டது. பாளி-பாகத நாகரிகமாயிருந்த சமய வாழ்வும் திரிபுற்று, புத்த -சமணநெறி சார்ந்த நாகரிகமாயிருந்து