தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
143
அது இப்போது வைதிக நெறி சார்ந்ததாயிற்று சோழப் பேரரசின் ஆற்றல் மூலம் மீண்டும் தாய்மொழி சார்ந்த நாகரிகம் மாநிலமெங்கும் பரவும்வரை அது ஒரு புதிய இடைக்கால ஆரிய நாகரிகமாக ஆயிர ஆண்டுக்கு மேற்பட வளர்ந்தது.
வடமேற்கு அலை, நாகரிகக் கொடியின் தலையூற்றாக இருந்த தமிழகத்தை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், அது பாதிக்காமலே இருந்திருந்தால், இந்தியாவின் வரலாறும் ஆசியாவின் வரலாறும், கீழ் திசையின் வரலாறும் வேறாய் இருந்திருக்கும். உலக நாகரிக வரலாறே வேறுபட்டிருக்கும். வடமேற்கு அலை தென்னாட்டின் வடமேற்குப் பகுதியில் ஆந்திரப் பேரரசை நிலைகுலையச் செய்தது. அதன் தென் எல்லையிலும் தமிழக வட எல்லையிலும் இருந்த பண்படாத் தமிழின மக்களான களப்பிரரை அது தமிழகத்தின் மீது புரளும்படி செய்தது. இதன் மூலம், தமிழர் நாகரிகம் களப்பிரரை நாகரிகப்படுத்தி மேல் திசையில் பரவுவதற்கு மாறாக, களப்பிரர் நாகரிகமே தமிழ் நாகரிகத்தின் புகழ் மரபைக் கிட்டத்தட்ட அழிக்கும்படி நேர்ந்தது.
களப்பிரர் என்பவர் கடலோரமாக முத்திசையிலும் வளர்ந்த தமிழ் நாகரிகத்தில் ஒதுங்கிவிட்ட தமிழின மலங்குடி மக்களே. அவர்கள் திருப்பதிக்கு வடக்கேயுள்ள காடுகளில் வேட்டையாடியும் ஆடுமாடு மேய்த்தும் காடோடிகளாக வாழ்ந்தவர்கள்.மேற்கிலிருந்து சேரரும், தெற்கிலிருந்து சோழரும், கிழக்கிலிருந்து புதிய தமிழக அரசரான பல்லவரும், வடக்கிலிருந்து ஆந்திரரும் அவர்கள் நாட்டில் உழவும் குடியும் புகுத்தி நெருங்கி வந்தனர். இவர்களுள்ளும் தமிழக அரசர் களுள்ளும் நடந்த போர்களில் அவர்கள் ஈடுபட்ட தனாலேயே, தமிழகத்தில் சோழநாட்டின் வட எல்லை பல போர்களுக்கு ஆளாயிருந்தது என்று கண்டோம். வடக்கிலிருந்து பண்படா இனங்களின் தாக்குதலே இவர்களை அலையலையாகத் தெற்கு நோக்கிக் கொண்டுவந்து தமிழகத்தின் மீது புரளச் செய்தது.
பல்லவர் குடிமரபின் தொடர்புகள்
பல்லவர், பண்படா அயலினங்களுள் ஒன்றான பஃலவரே என்று சிலரும், பாளி சமஸ்கிருத நாகரிகத்தையே முதலில்