தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
145
தமிழகத்தின் புதிய பேரரசராக விளங்கினர். அடுத்த மூன்று நூற்றாண்டுகளின் தமிழக வரலாறு பெரிதும் பாண்டியர் பல்லவர் பேரரசுப் போட்டியாகவே இருக்கின்றது. ஆனால், இப்போது பேரரசுப் போட்டி தமிழகத்துடன் நிற்கவில்லை. தென்னாட்டரசியல் எல்லை முழுவதிலும் அப்போட்டி பரவி விட்டது காண்கிறோம். ஆந்திரப் பேரரசின் அழிபாட்டி னிடையே வடக்கில் சாளுக்கியரும் தெற்கில் கங்கரும் தமிழகத்துக்கு வடக்கிலிருந்து பாண்டிய பல்லவருடன் தலையிட்டுப் போட்டியிட்டனர். அவர்களிடையே தமிழகத்தில் சோழரும், வடக்கே கடம்பர், பாணர், வைடும்பர், நுளம்பர், தெலுங்கச்சோடர் ஆகியவர்களும் போட்டியில் ஒவ்வொரு தரப்பிலும் சேர்ந்து பங்கு கொண்டனர்.
ரை
சாளுக்கியருக்கு வடக்கே சிந்து கங்கை சமவெளியில் கி.பி. 4-5-ம் நூற்றாண்டுகளில் குப்தப்பேரரசும் 7-ஆம்நூற்றாண்டில் ஹர்ஷரின் தானேசுவரப் பேரரசும் இருந்தன. கரிகாலனும் செங்குட்டுவனும் வடதிசை சென்று வீர வெற்றி பெற்றது போலவே, குப்தர்களில் சமுத்திர குப்தன் வெற்றி உலாப்புறப் பட்டான் என்று கூறப்படுகிறது. அவன் காஞ்சிவை படையெடுத்தான் என்றும், காஞ்சியில் விஷ்ணுகோபன் என்ற அரசன் அவனை எதிர்த்துத் திருப்பியோட்டினான் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணுகோபன் கி.பி. 4-ஆம் நூற்றாண்டி லிருந்த ஒரு பல்லவனேயாகலாம் என்றும் வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். சிலர் சமுத்திரகுப்தன் அவ்வளவு தென்கோடி வரை வரவில்லையென்றும், விஷ்ணுகோபன் முதலிய அரசர் கலிங்க நாட்டில் சென்றே போரிட்டனர் என்றும் சொல்கிறார்கள். அடுத்த குப்த அரசன் இரண்டாம் சந்திரகுப்தன் அல்லது விக்கிர மாதித்தன் விந்தியத்துக்கு வடக்கே வங்காளத்திலிருந்து கூர்ச்சரம் வரை இருகடலும் அளாவும் பேரரசு ஆண்டான். குப்த ஆட்சி சரிந்தபின் ஊணரை எதிர்த்து வெற்றி பெற்ற அரசன் ஹர்ஷனும் இதுபோலவே இருதிசைக் கடல் அளாவும் பேரரசை நாட்டி, தற்கே சாளுக்கியரையும் வெல்லக் கனவுகண்டு கொண்டிருந்தார்.
சாளுக்கியருக்கு இங்ஙனம் வடக்கே ஹர்ஷனும் தெற்கே பல்லவரும் போட்டியாயினர். பல்லவருக்கோ வடக்கே சாளுக் கியரும் தெற்கே பாண்டியரும் போட்டியானார்கள். எனவே