பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

||--

அப்பாத்துரையம் - 16

7-ஆம் நூற்றாண்டு ஹர்ஷ - சாளுக்கியப்போட்டி, சாளுக்கிய- பல்லவப் போட்டி, பல்லவ -பாண்டியப் போட்டி ஆகிய பல திசைப் போட்டிகளுக்கு ஆளாயிருந்தது.

சாளுக்கிய பல்லவப் போட்டி: புள்ளலூர்ப்போர்

பல்லவன் மகேந்திரவர்மன் கி.பி. 610 -லிருந்து 630 வரை ஆண்டான். அவன் தந்தை காலத்திலேயே பல்லவப் பேரரசு தொண்டை நாடு, சோழ நாடு ஆகியவற்றுடன் வடதிசையில் கோதாவரி கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையிலுள்ள வேங்கை (தற்காலக் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் அடங்கிய) நாட்டையும் வென்று உட்கொண்டு பரந்திருந்தது. இதே காலத்திய சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியும் கடம்பரையும் மற்ற சிற்றரசர்களையும் வென்று பல்லவன் எல்லைவரை தன் பேரரசைப் பரப்பி, பல்லவர் மீது பாயச் சமயம் பார்த்திருந்தான்.

பல்லவப் பேரரசுக்குத் தெற்கில் சிற்றரசரான சோழரும் பாண்டியப் பேரரசரும் இருந்தனர். அதன் மேற்கே கங்கர் வலிமை வாய்ந்த சிற்றரசராய் இருந்தனர். புலிகேசி முதலில் கங்க அரசனாகிய துர்வினீதனைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பல்லவப்பேரரசின் மீது படையெடுத்தான். சாளுக்கியர் நம் வெற்றிகளைப் பற்றியும் பல்லவர் தம் வெற்றிகளைப் பற்றியும் மட்டுமே குறித்துள்ளனர் என்று தோன்றுகிறது. இந்தப் போர் பற்றி இருதரப்புகளும் இருவேறுபட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகேசியின்

ஐஹோளே'க் கல்வெட்டு அவன் வெற்றியை வானளாவப் புகழ்கிறது. அவன் படைகள் பேரரசை முற்றிலும் அலைக்கழித்தன. பல்லவ அரசன் படையுடன் காஞ்சி நகருக் குள்ளே சென்று தஞ்சம் புகுந்தான். சாளுக்கியப் படைகள் காஞ்சி கடந்து தெற்கே வந்தன. பல்லவப் பேரரசு முழுவதையும் ஆட்கொண்டபின் சாளுக்கியப் படைகள் மீண்டன.சாளுக்கியப் படைகள் எழுப்பிய தூசிப்படலம் பல்லவ மன்னரின் ஒளியை மங்கச் செய்தது. இதுவே அப்பட்டயம் தரும் விவரம் ஆகும்.

சாளுக்கிய ஆதாரங்கள் வெற்றியின் இன்னொரு பகுதியைப் பற்றியும் கூறுகின்றன. சாளுக்கியர் வேங்கை