பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

147

நாட்டைப் பல்லவர்களிடமிருந்து வென்றனர். புலிகேசி அதைத் தன் தம்பி விஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்து, அவனை அங்கே அரசனாக்கினான். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. ஏனெனில் இந்த விஷ்ணு வர்த்தனனே கீழை சாளுக்கியர் என்ற ஒரு புதிய மரபுக்கு முதல்வனானான். புலிகேசியின் மூல மரபு இதன் முன்பே சாளுக்கியர் என்று பெயர் பெற்றது. சாளுக்கியரின் இந்தப் பிளவு பின்னாளில் சோழப் பேரரசின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்று.

பல்லவர்களுடைய காசக்குடிப் பட்டயம் போரின் மற்றொரு புறத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.

'மகேந்திரன் தன் நாட்டின்மீது படையெடுத்த பகைவர் களைப் புள்ளலூரில் முறியடித்துத் துரத்தினான்' என்று கூறுகிறது அது.

இரண்டு தரப்புக்கள் தரும் விவரங்களும் சேர்ந்தால் முழு உண்மையும் தெரியவரும்.

புள்ளலூர் என்பது காஞ்சிபுரத்துக்குப் பத்துக் கல்தொலை விலுள்ள ஒரு ஊர்; புலிகேசியும் துர்வினீதனும் முதலில் பல்லவப் பேரரசு முழுவதும் தாக்கிச் சூறையாடினார்கள். சோழ பாண்டியரையும் புலிகேசி பல்லவருக்கெதிராகத் தூண்டி விட்டிருந்ததனாலேயே இது எளிதில் முடிந்தது. தென் எல்லையில் தென் தமிழரசர் படைகளும், வடதிசையில் சாளுக்கியப் படைகளும் ஒரே சமயத்தில் ஒருங்கே தாக்கியதாலேயே பல்லவன் மகேந்திரன் காஞ்சிக் கோட்டைக்குள் சரணமடைய நேர்ந்தது. இத்தறுவாயைப் பயன்படுத்திச் சாளுக்கியர் பல்லவப் பேரரசின் வடபகுதியையும் கவர்ந்துகொள்ள முடிந்தது.

ஆனால், போர் முடிவில், பல்லவன் படைகளுடன் வெளி வந்து காஞ்சிக்கு வெளியே முற்றுகையிட்ட சாளுக்கியப் படை களைத் தாக்கினான். அவர்களைத் துரத்தியடித்து, புள்ளலூர்ப் போரில் அவர்களை முறியடித்துப் பல்லவ அரசின் எல்லையி லிருந்தே அப்புறப்படுத்தினான்.

புள்ளலூர்ப் போர் பல்லவ வெற்றியானதனாலேயே அதைப் புலிகேசியின் பட்டயங்கள் குறிப்பிடவில்லை. ஆனால், பல்லவப் பேரரசு இதற்குப் பின்னும் தன் பழைய எல்லையில்