பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

அப்பாத்துரையம் - 16

ஆட்சி செலுத்திவந்தது. இது புள்ளலூர் வெற்றிக்குச் சான்று. அத்துடன் புலிகேசி இதுபற்றிக் குறிப்பிடாவிட்டாலும் அவனுடன் நின்று போரிட்ட துர்வினீதன் கல்வெட்டுக்கள் இதைக் குறிப்பிடுகின்றன.

புள்ளலூருடன் முடிவடைந்த போராட்டம் இரு சார்பு களுக்கும் வெற்றி தோல்வியில்லாச் சம நிலைப் போராட்டமே என்று கூறத்தகுமானாலும், பல்லவப் பேரரசு அதனால் வேங்கை நாட்டை இழந்தது. இது அதற்கு ஒரு வலிமைக் கேடே என்று கூறலாம். ஆனால், அதே சமயம் வளர்ந்துவரும் சாளுக்கியப் பேரரசுக்குப் பல்லவப் பேரரசன் புள்ளலூர் வெற்றி, ஒரு தடை யாயிற்று என்றும் கூறவேண்டும்.

,

மகேந்திரவர்மன் ஒரு பேரரசன், பெருவீரன், அத்துடன் அவன் ஒரு தலைசிறந்த கலையார்வலனாகவும் கலைஞனாகவும் விளங்கினான். பல கோயில்களை அவன் கட்டியதனால் அவன் சேதகரி (சைத்தியம், கோயில்காரி; செய்தவன் சைத்யகாரி, அல்லது சேதகரி, கோயில் கட்டியவன்) என்றும், ஓவியங்கள் பல அவற்றிலே தீட்டியதால் சித்திரக்காரப்புலி என்றும் அழைக்கப்பட்டான். செங்கற்பட்டுக்கருகிலுள்ள வல்லத்திலும் திண்டிவனத்துக்கருகிலுள்ள தளவனூரிலும், அரக்கோணத்தை அடுத்த மகேந்திரவாடியிலும் இவன் சமணர்களுக்குரிய குகைக்கோயில்கள் கட்டினான்.

இம்மன்னன் தொடக்கத்தில் சமணனாயிருந்து, தேவாரப் புகழ் வாய்ந்த திருநாவுக்கரசு நாயனார் என்கிற அப்பரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டான். சைவனானபின், இவன் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் திருவதிகையிலுள்ள சமணப்பள்ளியை இடித்துத் தன் பட்டப் பெயரான ‘குணபரன்’ என்ற தொடரால் குணபரேசுரம் என்ற சிவன் கோயில் கட்டுவித்தான். இச்செய்தியை அவனது திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

தென்னாட்டில் மரம், செங்கல், சுண்ணாம்பு இல்லாமல் முதல் முதல் கற்குடைந்து கோயில் கட்டியவன் இவனே. இதைத் தென் ஆர்க்காட்டு மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டுக் கல்வெட்டுத் தெளிவாக்குகிறது. இதுவரை இருந்த தமிழ்க்கோயில்கள் மரத்தாலோ, சுண்ணத்தாலோ