பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

149

கட்டப்பட்டன ன வென்பதையும், இதனாலேயே அவற்றை நாம் இன்று காண முடியவில்லை என்பதையும் இது விளக்குகிறது. காஞ்சியில் வயல்களெங்கும் காணப்படும் கல் இலிங்கங்கள் இடிந்து தகர்ந்த இந்தப் பழைய கோயில்களின் இலிங்கங்களேயாகும்.

மூல

அந்நாளைய இசைக்கலையில் இம்மன்னன் தேர்ச்சிபெற்ற வனாயிருந்தான். சில புதிய சுரங்களையும், பண்களையும் அவனே சமைத்தான் என்று அவன் குடுமியாமலைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நடன ஓவியக் கலைகளில் அவன் சிறப்பையும், அவன் காலச் சிறப்பையும் சித்தன்னவாசல் உயிரோவியங்கள் ன்றும் புலப்படுத்துகின்றன.

அவன்

சமண

சமஸ்கிருதத்தில் பெரும்புலவன். மதத்தினனாக இருக்கும் சமயம் அவன் புத்தரையும் காபாலிக சைவரையும் நகைச்சுவை ததும்பத் தாக்கி, 'மத்தஹாசப் பிரஹசனம்' என்ற களிநாடகம் இயற்றினான்.

சிம்பிகைப் போர்

பல்லவப் பேரரசின் மீது தன் அடுத்த தாக்குதலைத் தொடங்குமுன் இரண்டாம் புலிகேசி தன் நாட்டைச் செப்பம் செய்யத் தொடங்கினான்.

பாணர் தலைவனான இரண விக்கிரமனை முறியடித்து, இரண்டாம் புலிகேசி (606 -642) சிம்பிகைப் போரில் அவன் நாட்டைச் சூறையாடினான். அவன் நாட்டில் பொன்னாகவே நேரடியாக வரிவசூலித்து, அதைத் திறையாகக் கொண்டு சென்றான். இந்தத் திறை திரப்பொன் (திறைப்பொன்) என்று குறிக்கப் பட்டுள்ளது.

வடதிசைப் பெரும்போர்

புலிகேசி தெற்கே திரும்புமுன் வடதிசையில் ஹர்ஷவர்த் தனஸ் என்ற கன்னோசிப் பேரரசன் தெற்கே படையெடுப்பதாக அவனுக்குத் தெரியவந்தது. அவன் வடதிசை நோக்கிச் சென்றான். ஹர்ஷனும் புலிகேசியும் ஈடுபட்ட போரில் ஹர்ஷன் முறியடிக்கப் பட்டான்.புலிகேசி இந்த வெற்றியைப் பயன்படுத்தி வடநாட்டின் மீது படையெடுக்க விரும்பவில்லை. தெற்கேயிருந்த பல்லவப்