பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

||--

அப்பாத்துரையம் – 16

6

பேரரசை எண்ணி அவன் வடக்கே சமரசம் செய்துகொண்டு திரும்பினான்.

கோயத்தார், தண்டக்கல், முனயத்தூர்ப் போர்கள்

பாணர்கள் மீண்டும் புலிகேசியை எதிர்த்துப் போரிட்டனர். புலிகேசியின் கீழ்ச் சிற்றரசனாயிருந்த கங்கத்தலைவன் மாதவ முத்தரசன் அல்லது முத்தய்யா என்பவன். அவன் கோயத்தார், தண்டக்கல், முனயத்தூர் என்ற இடங்களில் அவர்களை முறியடித் தான்.

கோயத்தூர் என்பது சித்தூர் மாவட்டத்தில் புங்கனூர்ப் பெருநிலக் கிழமையைச் சார்ந்த ஓர் ஊர் ஆகும்.

சாளுக்கிய - பல்லவப் போட்டி

பரியளம், மணிமங்கலம், சூரமாரம்

முதலாம் மகேந்திர வர்மனுக்குப்பின் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (630-668) பேரரசனானான். முந்திய பல்லவனாட்சியில் புள்ளலூரில் அடைந்த தோல்வியைக் கழுவும் எண்ணத்துடன் புலிகேசி இப்போது படையெடுத்தான். இப்போரில் பல்லவனே பெரு வெற்றியடைந்தான். சாளுக்கியர் நாட்டின் மீதே எதிர் தாக்குதல் நடத்திச் சாளுக்கியப் பேரரசன் கொட்டம் ஒரு தலை முறைக்கு மீண்டும் எழாதவாறு செய்தான்.

ப்போரின் விவரங்களைப் பல்லவர்களின் வேலூர்ப் பாளையம் செப்பேடுகளும், கூரம் செப்பேடுகளும் நமக்கு விரித்துரைக்கின்றன.

பரியளம், மணிமங்கலம், சூரமாரம் என்ற மூன்று இடங் களில் தொடர்ந்து பல்லவன் பெருவெற்றி பெற்றான், சாளுக் கியப் படைகளைப் பல்லவப் பேரரசின் எல்லைக்கப்பால் துரத் தினான்.

கல்

மணிமங்கலம் என்பது காஞ்சிக்கு இருபது தொலைவில் இன்றும் உள்ள ஊரே. பரியளமும் சூரமாரமும் அணிமையிலேயே இருந்திருக்கக்கூடும். இப்போர்களில் யானைக் கூட்டத்துக்குச் சிங்கம் போன்றவனும், நரசிங்கப் பெருமானை ஒத்தவனும், வணங்கா முடிமன்னர் மகுடத்தின்மேல்