தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
151
இருக்கும் சூடாமணியைப் போன்றவனுமான நரசிம்மவர்மன் வெற்றியென்னும் பதத்தைப் புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தின் மீது எழுதினான்' என்று அணியலங்காரமாகக் கூரப் பட்டயம் குறிக்கிறது.
வாதாபிப் பேரழிவு கி.பி. 642
சாளுக்கியரை முறியடித்ததுடன் நரசிம்மவர்மன் அமைய வில்லை. அவன் சாளுக்கியர் தாயத்தின்மீதே படையெடுத்துச் செல்ல முனைந்தான். இதே சமயம் முன் சாளுக்கியப் போரில் பாண்டியர் தெற்கில் படையெடுத்ததுபோல, இப்போதும் படை யெடுத்ததாகத் தெரிகிறது. எல்லைப்புறப் படைகளைப் பாண்டியன் வென்றதால், மன்னன் விரைந்து தெற்கே செல்லவேண்டியிருந்தது. அப்படியே மன்னன் சென்று பாண்டியனை வென்று அவனைப் பாண்டிய நாட்டுக்கே துரத்தியதாக அறிகிறோம். ஆனால், தெற்கே புறப்படுமுன், பல்லவன் ஒரு பெரும் படையைச் சாளுக்கியப் படையெடுப்புக்கு வடக்கே அனுப்பி வைத்தான்.
இச்சமயம் பல்லவப் பேரரசர் நரசிம்மவர்மன் படைத் தலைவர் தமிழர் வரலாற்றிலும், இலக்கியத்திலும், சமய வாழ் விலும் ஒருங்கே இடம் பெற்ற பரஞ்சோதியார் ஆவர். சைவத் திருத்தொண்டர் அறுபத்து மூவரில் ஒருவராகக் குறிக்கப் பட்ட சிறுத்தொண்டர் இவரேயாவர்.
படைத்தலைவர் பரஞ்சோதியார் தலைமையில் பல்லவப் பெரும்படை சாளுக்கியப் படைவீரரை அவர்கள் தலைநகரான வாதாபிக்கே துரத்திச் சென்றது. பல்லவர் சாளுக்கியப்படை களைக் கொன்று குவித்தனர். சாளுக்கியர் நாடு முழுவதும் திரிந்து சூறையாடினர். தலைநகரான வாதாபியைக் கைப்பற்றி அதை மண்ணோடு மண்ணாக்கி, அதன் எல்லையில் தம் வெற்றித் தூண் நிறுவினர். பல தலைமுறைகளாகச் சாளுக்கியர் சேகரித்து வைத்திருந்த பெரிய செல்வக் குவையையும் பொன்னையும் பரஞ் சோதியார் கைப்பற்றி, அவற்றைத் தம் பேரரசன் நரசிம்மவர்மன் முன் கொண்டு வந்து குவித்தார்.
தம் வெற்றிச் சின்னங்களுள் ஒன்றாக, பரஞ்சோதியார் வாதாபியிலிருந்து கொண்டு வந்த பெரிய பிள்ளையார்