152
அப்பாத்துரையம் - 16
சிலையை அவர் காஞ்சிமாநகரில் நிறுவினார் என்றும், அத்தெய்வம் அதன் பின்னரே தமிழர் வணங்கும் தெய்வங்களுள் இடம்பெற்று, சிவபெருமானின் பிள்ளையாகிய முருகனுக்கு முன் பிறந்த மூத்த பிள்ளையாராக கொள்ளப்பட்டதென்றும் அறிகிறோம். ஏழாம் நூற்றாண்டுக்கு முன் சமய இலக்கியங்களில் பிள்ளையார் என்ற சொல் முருகனுக்குமட்டுமே வழங்கிற்று. முருகன், சிவன், திருமால் ஆகியவர்களே நூலின் காப்புக் கடவுள்களாக முன்பு வழங்கியது போல, இதுமுதல் பிள்ளையார் காப்புக் கடவுளாயினர்.
பிள்ளையார் - தொடக்கத்தில் மராத்தியர் தெய்வம் என்றும், மூன்று மனைவியர்களை உடையவர் என்றும் அறிகிறோம், முருகனே அந்நாளில் வடதிசையில் மணமாகாக் காளையாய் வணங்கப்பட்டார். எப்படியோ தமிழகத்தில் முருகனுக்கு இரு மனைவியர் இருந்ததாகச் சொல்லப்பட்டிருந்த தனால், பிள்ளையார் மணமாகாக் கடவுளாய்ச் சந்திகள், குளக்கரைகள், கோயில் வாயிற்படிகள் தோறும் இடம் பெற்றார்.
“வாதாபி கணபதிம் பஜே!” என்ற இக்காலப் பாட்டுக் கச்சேரிகளின் காப்புப் பாடலின் முதலடியில் கணபதி வாதாபியி லிருந்து வந்த இந்தச் செய்தி இன்றும் குறிக்கப்பட்டே வருகிறது!
வாதாபி வெற்றியின் பின்னரே பரஞ்சோதியார் வீரப்புகழ் போதும் என்று விடுத்து, அசோகனைப் போல் அருட்புகழ் நாடி, தொண்டர்க்குத் தொண்டனாம் சிறுத் தொண்டரானார்.
அவர் திருத்தொண்டுகளை விரித்துரைக்கும் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் அவர் வாதாபி வெற்றியையும் திறம் படப் பாடியுள்ளார்.
66
"மன்னவர்க்கு தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொல்நகரம் துகளாகத்
துணைநெடுங்கைவரை உகைத்தும்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே இகல் அரசன் முன்கொணர்ந்தார்!"