தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
153
வாதாபி அழிவிலேயே புலிகேசி போரில் இறந்து பட்டிருக்கவேண்டும். போரின் கடுமையும் அழிவும் சாளுக்கிய குலம், முன் என்றும் அறிந்திராத ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் வாதாபி நகரம் பின் என்றும் தலைநகரமாக இயங்கியதில்லை. தென்னாட்டின் பாழ்பட்ட நகரங்கள் பட்டியலில் அது நிலையாகவே இடம் பெற்றுவிட்டது. அத்துடன் வாதாபி அழிவின் பின் பதின்மூன்று ஆண்டுகள் சாளுக்கியப் பேரரசு அரசனில்லாப் பேரரசாகவே நிலவிற்று. அரசு நிலையில் பெருங் குழப்பத்துக்குள்ளாகியிருந்த பேரரசை இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தியன் திரும்பத் தந்தை காலநிலைக்குச் சீர்ப்படுத்தி முடிசூட்டிக் கொண்டது கி.பி. 655-லேயே ஆகும்.
சாளுக்கியருக்கெதிரான பல்லவர் போர்களில் இலங்கை அரசன் ஒருவனும் உதவியதாக விக்ரமாதித்தியன் ஆட்சியில் வெளியிடப்பட்ட கர்நூல் பட்டயத்தால் அறிகிறோம்.
பல்லவர் இலங்கைத் தொடர்பு
நரசிம்மவர்ம பல்லவன் வடபுலமாகிய வாதாபியை மட்டு மல்ல, இலங்கையையும் வென்றான் என்று காசக்குடிப் பட்டயம் கூறுகிறது.இச்செயலைத் தசரத ராமன் செயலுடன் அது ஒப்பிடு
கிறது.
சாளுக்கியரைத் தோற்கடித்தவர் மூவர் என்று விக்கிரமா தித்தனும் கூறுகிறான். இம் மூவருள் நரசிம்மவர்மனுடனிருந்த மற்ற இருவர், பல்லவர் வடதிசையாண்டு முந்திய சாளுக்கிய வெற்றியால் பதவியிழந்த பல்லவ மாகாணத் தலைவன் ஒருவன். மற்றவன் இலங்கையரசனான மானவர்மனேயாகும். இவன் பகைவர்களால் தன் அரசிழந்து, காஞ்சியில் நரசிம்மவர்மனிடம் தஞ்சம் புகுந்திருந்தான் என்று இலங்கைப் பண்டை வரலாற்று ஏடான மகாவம்சோ கூறுகிறது. சாளுக்கியப் படையெடுப்பில் அவன் உதவி செய்ததன் பயனாக, பல்லவன் நரசிம்மவர்மன் அவனுக்கு ஒருபடை கொடுத்துதவி இலங்கை அரசியலை மீட்கும் படிஅனுப்பினான். ஆனால், மானவர்மன் தன் எதிரி அரசனான அட்ட தத்தனுடன் போர் புரிந்து தோற்று விட்டான்.