தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
155
மாமல்லபுரம் பிற்காலத்தாரால் 'மகாபலிபுரம்’ ஆக்கப் பட்டது.மாமல்லையில் அவன் அமைத்த ஐம்பெருந் தெய்வங்கள் (பஞ்சமூர்த்திகள்) கோயில்களும் பிற்காலத்தாரால் பஞ்சபாண்ட வரின் ‘தேர்கள்' ஆகக் கொள்ளப்பட்டன.
ய
சங்ககால இலக்கியக் கலையழகைச் சிற்பத்திலும் ஓவியத் திலும் காட்டிய பல்லவர் சிறப்பை மேனாட்டவர் கண்டு வியந்து பாராட்டும்வரை கவனிக்காதிருந்த தமிழர், தேவார பெரிய புராண காலத்துக்குப்பின் பல்லவர் புகழை மறந்ததில் வியப்பில்லை. அத்துடன் இப்பல்லவர்கள் தமிழில் அக்கரை காட்டாமல் சமஸ்கிருதத்திலேயே மிகுதி ஈடுபட்டிருந்தனர் என்பதைக் கொண்டு அவர்கள் அயலினத்தவர் என்று வரலாற்றாசிரியர் பலர் கருத முனைந்து விடுகின்றனர். ஆனால், முழு உண்மையைச் சரிவரக் காண்பதானால், மரபிழந்து வந்த பழந்தமிழ்க் கலைச் சிறப்புக்களையெல்லாம் சமஸ்கிருதப் பெருமையாக்கிப் புது நிலப்பரப்பில் தவழவிட்டு, அதன் மூலம் பாளி - பாகத காலப் 'பழைய ஆரிய' நாகரிகத்தைப் பிற்காலப் 'புதிய ஆரிய' மாகிய சமஸ்கிருத ஆரியமாக வளர்த்த பெருமையில் பெரும் பகுதி பல்லவர்களுடையதேயாகும்.
வாதாபி, மாமல்லபுரம், நாமக்கல், குடுமியாமலை, புதுக் கோட்டையருகிலுள்ள திருமெய்யம், திருச்சிராப்பள்ளி ஆகிய டங்களில் இப்பல்லவன் குக்ைகோயில்கள் கட்டினான். அவன் சில ஆண்டுகளேனும் வாதாபியை ஆண்டான் என்பதை வாதாபிக் குகைக்கோயில்கள் காட்டுகின்றன. லால்குடிக்கு அருகிலுள்ள பல்லாவரத்திலும் காஞ்சியிலும் அவன்
கோட்டைகள் கட்டியதாகத் தெரிகிறது.
சீனயாத்திரிகன் யுவான் சுவாங் இவ்வரசன் காலத் திலேயே கி.பி. 640-ல் காஞ்சிக்கு வந்து அங்கே நீண்டகாலம் தங்கியிருந்தான். தென்னாட்டை அவன் ‘திராவிடம்' என்ற பெயராலேயே குறித்துள்ளான். அதன் அந்நாளைய நாகரிகம், சமய வாழ்வு ஆகியவைபற்றியும் அவன் எழுதியுள்ளான். காஞ்சியிலிருக்கும்போதே ஒரு பாண்டியன் இறந்ததாகவும், அதன் பின் பாண்டிய நாட்டையும் அவன் சென்று கண்டதாகவும் தெரிகிறது. இறந்த பாண்டியன் செழியன் சேந்தன் என்றும், அடுத்த பாண்டியன் அரிகேசரிமாற வர்மன் என்றும் தெரிகிறது.