பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

|| - -

அப்பாத்துரையம் - 16

பாண்டியப் பேரரசு: நின்ற சீர்நெடுமாறன்

முதலாம் நரசிம்மவர்மன் காலத்திய பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் என்றும் அவன் ஏறத்தாழ கி.பி.640 முதல் 670 வரை ஆண்டான் என்றும் தோற்றுகிறது. வேள்விக்குடி, சின்னமனூர்ச் செப்பேடுகளால் அவன் இடைக்காலப் பாண்டியரில் முதல் வராகிய கடுங்கோன், அவனி சூளாமாணி, செழியன் சேந்தன் ஆகிய மூவருக்கும் பின் வந்தவன் என்று அறிகிறோம்.

தமிழிலக்கிய ஆராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் தொடக்க நிலையிலிருந்த காலத்தில் பலர் சங்ககாலத்துக்கு முற்பட்ட நெடியோன் அல்லது நிலந்தருதிருவிற் பாண்டியனோடு இப் பாண்டியனை ஒன்றுபடுத்திக் குழப்பி இடக்குற்றனர்.

மற்றும், இவனை இவனுக்குப் பின் வந்த பாண்டி கோச்சடையன் இரணதீசன், பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்ற முதலாம் இராசசிம்மன் ஆகிய இருவருடனோ பின்னவனுடனோ ஒன்றுபடுத்துவரும் உண்டு.

னாகச்

சிலரும்

அரிகேசரி

தவிர, இறையனாரகப் பொருளுரையில் மேற்கோளாகத் தரப்பட்ட பாண்டிக்கோவையின் தலைவனையே இப்பாண்டிய பராங்குசனாகச் சிலரும் கொள்வதுண்டு. பராங்குசன் வெற்றி பெற்ற போர்களில் சில பலவற்றின் பெயர் அக்கோவையில் வருவதே இதற்குக் காரணம் ஆகும். ஆனால், ஆசிரியர் மறைமலையடிகள் போதிய காரணம் காட்டி, கோவைத் தலைவன் இரண்டாவது இடைக் காலப் பாண்டியன் அவனி சூளாமணியே என்று நாட்டியுள்ளார். அடுத்துவரும் சேந்தன் வானவன் என்று பெயர் பெறுவதனால், அவனோ, அவன் முன்னோனோ, இருவருமோ சேரநாட்டில் வெற்றிகள் அடைந்தனர் ஆகல் வேண்டும். இந்தப் பாண்டியர் சமணர்களாயினும் தமிழை வளர்ப்பதில் பின்னடைந்ததில்லை என்பதைச் சேந்தன் காலத்தில் இயற்றப்பட்ட தமிழ் நிகண்டாகிய சேந்த திவாகரம் காட்டும். தமிழில் சமண காவியங்கள், ஏடுகள் பல இக்காலத்தன ஆதல் கூடும்.

முந்தியவர் செய்திகள் எதுவாயினும் நான்காவது இடைக் காலப் பாண்டியன் அரிகேசரி மாறவர்மனே பாண்டிய அரசைப் பேரரசாக்கிய முதற் பெரும்பாண்டியன் என்பதில் ஐயமில்லை.